பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

82


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 82

2. கடையிலாக் காட்சி Omni Science

3. கடையிலா வீரியம் Omni potence

4. கடையிலா இன்பம் boundless happiness 5. பெயர் நாமம் இன்மை being nameless 6. குலம் கோத்ரம்) இன்மை Without descent 7. அகவை (ஆயுள்) இன்மை withoutage (eternal) 8. தடையிலா யியக்கம் Unobstructed -

- இவற்றிலும்கூட மாந்தருக்குள்ள தன்மைகளுக்கான எதிர்த் தன்மைகளே இறைவனின் தனித் தன்மைகளாகக் கூறப் பெற்றுள்ளதைக் கவனிக்க வேண்டும். இங்கும் இறைவனின் அறிவுத் தன்மையும் ஆற்றலும், புறநிலைகளும், சொல்லப் பெற்றுள்ளனவே தவிர, குணங்கள் சொல்லப்பெறவில்லை. *

ஒருவன் வேகமாக ஓடுவதும், வீரமாகச்.சண்டை பிடிப்பதும், பெயர் வைத்துக்கொள்ளுவதும் அல்லது இல்லாமலிருப்பதும், குலமும், அகவையும் அவனுடைய குணங்கள் ஆகுமா? எண்ணிப் பார்க்க. - - - எனவே, எண்குணம் என்பது ണ്ണഖങ്ങ, ஏழைமை, எளிமை, தாழ்மை, நொடிமை, மிடிமை, வறுமை, துயரம், துன்பம், கேடுகள், தீமைகள், கல்லாமை முதலிய எவ்வகையான கீழ்மைநிலை வயப்பட்டவர்களுக்கும் எளிதில் இரங்கும் - அருளும் தன்மையே இங்குச் சிறப்பாகக் குறிக்கப்பட்டது. மற்று, அறிவு, செல்வம், பத்திமை, ஆரவாரப் பூசைகள், ஒகம், தவம், முதலிய மேனிலைக் கூறுகளில் ஈடுபட்டவர்க்கேயன்றி, எளியார்க்கும் எளியனாய் உள்ள குணம் உள்ள தன்மையே இறைவனது சிறப்பான குணமென்றார் என்க. . - இதனை, -

"பத்துடை அடியார்க்கு எளியன்! பிறர்களுக்கு அரிய வித்தகன்" என்று நம்மாழ்வார், - "எளியதிது வென்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலிர்” . . . . . . . . . " " و "

என்று காரைக்கால் அம்மையார்,

"திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை