பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அ - 1 -2 - வான்சிறப்பு - 2

அ-1. பாயிரவியல் அ-1-2. வான் சிறப்பு-2 அதிகார முன்னுரை:

அறமுதற் பொருளாகிய இறைமையினது இயக்கத்தின்கீழ்த் தங்கிய உலகின்கண், உயிர்கள் தோன்றி, மலர்ந்து, வளர்ந்து வாழ்க்கை செய்வான் வேண்டி, உலகுக்கு முதல் தேவையான உறுபொருள் நீரே ஆகலின், அந் நீர்தரு வான்மழையின் பெருமை கூறினார். ...

இறைமை ஒளிவழி உலகத்திற்கும் இயக்கத்திற்கும் முதனிலையாகச் செயற்பட்டு, உயிர்களின் தோற்றத்திற்கும் நிலைப்பிற்கும் ஒலியாகிய நீர்வழி இரண்டன் நிலையாகச் செயற்படுதலின் அதன்பின் இது கூறினார்.

உலகைப் பொறுத்த அளவில், இறைமையின் அறவுணர்வு செயல்படும் முதற்சுறு ஒலியாகிய காற்றும், இரண்டாம் கூறு ஒளியாகிய கதிரவனும் நிலவும், மூன்றாம் அறக்கூறு மழையும் ஆகும். ஒலியும் ஒளியுமாகிய மூல முதலிரு அறக் கூறுகளின் சிறப்பு நிலைகளை அறமுதல் உணர்தல்' அதிகாரத்துள் விளக்கினார். இங்கு மூன்றாம் அறக் க்றாகிய மழையினது சிறப்பு நிலைகளையும் அதன் கைம்மாறு வேண்டா கடப்பாடு 21 ஆகிய அறவுணர்வெனும் அளியையும் அதன் இன்றியமையாமையையும் உணர்த்துவார், என்க.

இதில் முதலிரண்டு குறள்களில் மழையின் பெருமையை உடன்பாட்டானும், பின் வரும் எட்டுக் குறள்களிலும் மழையின்மைக் கேடுகளை எதிர்மறையானும் உணர்த்துவார்.