பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+OO அ-2-9 அடக்கம் உடைமை 13

‘இம்மையும் மறுமையும் பெறுதகு வின்பமும், (98)

செய்ந்நன்றி யறிதல் உணர்வுடைமையால், - 101 வையகத்தினும், வானகத்தினும், கடலினும், - 103 ஞாலத்தினும் மாணப் பெற்ற பெருமையும், - 702 ‘எச்சத்திற்கு ஏமாப்புத் தரும் ஆக்கமும், - 112 அமரருள் உய்த்து, - 121

- அடக்கம், அழிவிலாத நிலைப்பை நிலையின் திரியாது

அடங்கியானுக்குத் தருமன்றோ?

ஈங்கு, இத்துணைச் சிறப்பியல்களும் பொருந்தப் பெற்று விளங்கும் அடங்கியான் முன்னேற்றம் மலையினும் மாணப் பெரிதன்றோ? ஆமென்க. எனவே, அதுவே ஆசிரியரது கருத்துமாம் என்க.

4. இஃது, அடக்கமுடைமையின் ஒழுகினார்க்கு விளையும் சீர்மையைக் கூறியது போலவே அவரின் வாழ்வியல் முன்னேற்றப் பெருமையையும் கூறியதால், அதன் பின்னர் வைக்கப் பெற்றதென்க.

கஉரு. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து. —125

பொருள்கோள் முறை :

பணிதல் எல்லார்க்கும் நன்றாம் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொழிப்புரை செல்வம், கல்வி, பதவி, அதிகாரம், தொழில், கலை முதலிய எந்நிலையில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவராக இருந்தாலும், அவரனைவர்க்கும் செருக்கின்றி அடங்கியொழுகுதல் நன்மை தருவதாகும். இவர்கள் அனைவருள்ளும், செல்வம் உடையவர்கள் அடக்கத்துடன் பணிவாக நடந்து கொள்ளுதல், அவர்களுக்குச் சொற்செலவு (செல்வாக்கு) என்னும் பெருமை தருவதாகும்.

சில விளக்கக் குறிப்புகள் : -

1. பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - செருக்கின்றி அடங்கி யொழுகுதல், செல்வம், கல்வி, பதவி, அதிகாரம், தொழில், கலை முதலிய எந்நிலையில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவராக இருந்தாலும், அவரனைவர்க்கும் நன்மை தருவதாகும். - -

எல்லார்க்கும் என்றது. வாழ்க்கை நிலையில் உள்ள எல்லாத் துறையினர்க்கும் என்று பொருள் பெறுவதால், அனைத்து