பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

103


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 103

அப்பொழுதுதான் அப் பரல்போலும் வெண்பற்கள் நிறைந்த வாயினது எயிற்றில் பாலும் தேனும் சுரந்து கலந்து கசியும் சுவையைத் தருகின்ற நீர் ஊறும் என்று, காதற் சிறப்புரைத்தல் என்னும் அதிகாரத்துள், கீழ்வரும் குறளில் கூறுவார்.

‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்’ - † 121 என்பது, அது. - இனி, மனைவிமட்டும் அவ்வாறு பணிவொழுகும் மொழிகளைப் பேசுபவளாக இருப்பது போதாது, அக் கணவனும் அதே போல் பணிவான மொழிகளையே தன் மனைவியிடம் பேசுபவனாகவும் இருத்தல் வேண்டும் என்பதை, அம் மனைவியின் வாய்வழியாகவே கூறவைக்கும் கருத்தும், மேலும் அவரது அறிவாற்றலை வெளிப்படுத்திக் காட்டி மகிழ வைப்பதாகும். நிறையழிதல் என்னும் அதிகாரத்துள் வருவது இது: - வேற்றுார் சென்று திரும்பிய தன் கணவனின் ஈடுபாட்டைப் பற்றித் தன் நெருங்கிய தோழியிடத்தில், அவன் வந்த மறுநாள் காலை, கூறுகிறாள். ‘என்ன செய்வது, தோழி! இத்தனை நாள்கள் என்னைத் தனிமையில் வாடவிட்டு விட்டுப் பிரிந்து சென்றவரிடம், அவர் மீண்டுவந்து என்னை நெருங்கிய நேற்றிராப் பொழுதில், சற்று விறைப்பாக இருந்து, அவரிடத்து என் பெண்மையைத் தருதற்கு விரும்பாதவள் போல், அவர் அணைப்பதைத் தவிர்த்துத்தான் நின்றேன்; ஆனால் என்னால் இயலவில்லையே! அவர் பல மாயங்கள் செய்யும் கள்வனைப் போல், என்னிடம் பணிவான மொழி என்னும் கருவியால், இறுகிக் கெட்டிப்பட்டிருந்த என் பெண்மை யுணர்வை உடைத்து, என் இன்பநலனைப் பருகிச் சுவைத்து விட்டாரே - என்று.

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை’ - f258 இவ்வாறு, தன் நிறையழிவு நேர்ந்த கதையை மெல்லிய நாணவுணர்வுடன், அன்பும் அழகும் தோய்ந்த மொழிகளால் கூறுவது போலும் ஒர் இலக்கிய ஓவியத்தை, ஆசிரியர் வரைந்து பொலிவிப்பது, அவரின் துண்ணிய மனநலத்தையும், திண்ணிய அறிவு நலத்தையும் நமக்குப் புலப்படுத்திக் காட்டுவதாகும். - . என, இவ்விவ்வாறு, பணிவுணர்வு எவ்வெவ் வகையில், பல்வேறு மக்களுக்குப் பல்வேறிடங்களில் வேண்டுவதும் நன்மை செய்வதும் ஆகும் என்பதை நமக்குநூலாசிரியர் உற்றுணர்ந்து காட்டும் அமைவும் அழகுமே தனித்தனிச் சிறப்புடையவாகும், என்க. . 2. அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - மேற்கூறிய இவர்கள்