பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 அ-2-9 அடக்கம் உடைமை 13

1. செய்யுள் அமைப்பு :

‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்.’ - ? (? கொண்டுகூட்டுப் பொருள் கோள் முறை :

‘இறைவனடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் சேராதார் நீந்தார். - இதில், சேர்ந்தார் என்னும் ஒரு புதுச்சொல்லையும் இணைக்க வேண்டியுள்ளது. இல்லெனில் பொருள் வராது. இது, வருவித்துக் கொண்டு கூட்டியது.

. இதைச் சொல்லெச்சம் என்பார் பரிமேலழகர், - இவ்வாறு செய்யுள் அமைப்பது பிழையில்லை. எடுத்துக் கொண்ட கருத்தைக் கூறப் போதுமான சொற்கள் செய்யுள் கட்டுக்குள் அமையவில்லையாயின், இவ்வாறு வருவித்துக் கொண்டு கூட்டிப் பொருள்கோள் முறையில், மிகச் சிறந்த புலவர்கள் அமைப்பது இழுக்கோ, சிறப்பின்மையோ அன்று. ஆனால், பொருட்சிறப்பு முகாமையானதாம.

2. செய்யுள் அமைப்பு :

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. – 58 கொண்டுகட்டுப் பொருள்கோள் முறை :

பெண்டிர் பெற்றான் பெறின் புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர். 3. செய்யுள் அமைப்பு :

‘உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது) அளறு.’ – 255 கொண்டுகூட்டுப் பொருள்கோள் முறை :

‘உயிர்நிலை ஊன் உண்ணாமை உள்ளது உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது. 4. செய்யுள் அமைப்பு :

‘எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு’ - - 991 கொண்டுகூட்டுப் பொருள்கோள் முறை :

‘யார்மாட்டும் எண்பதத்தால் பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப.