பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

117


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் tiz

அ-2 . இல்லறவியல் அ-2-10 ஒழுக்கமுடைமை -14

அதிகார முன்னுரை

‘ஒழுக்கு’ என்னும் பெயரடியாகத் தோன்றிய சொல் ஒழுக்கம். ஒழுக்கு நீர் ஒழுக்கு.

நீர் ஒழுகும் பொழுது, அது துளி துளியாகவும், நிலத்தை நோக்கி நேராகவும் ஒழுகுவதால், திரட்சிப் பண்பும் நேர்மையுணர்வும் ஒழுக்கம் எனப் பெற்றன. துளி திரளும் பொழுது அளவும் அடிப்படையானது. எனவே அளவாக அடங்கி நிற்ற்லும் திரண்ட குணங்களும் நேர்மையும் ஒழுக்கத்தின் அடிப்படைப் பண்புகளாயின. மேலும் நீரினது ஒழுக்கு என்னும் பொழுது, அதன் சாயலும் பண்பும் ஒழுக்கப் பண்பாயிற்று.

நீர்மை நீரினது தன்மை,

நீர் நிறமற்றது; சுவையற்றது; வடிவமற்றது. எடுக்கப் பெறுகின்ற கலத்தினது வடிவமும், கலக்கப் பெறுகின்ற பொருளினது சுவையும், வேட்கையைத் தணிக்கும் குணமும் நீர் கொண்டிருத்தல் போல், பழகுவார்க்குத் தக்கவாறு, அவர்க்குற்ற பண்பு நலன்களுக்கு ஒத்தவாறு, தாமும் இயங்கி, அவரது உள்ளத்தின் உணர்வு வேட்கையைத் தணிக்கும் அன்புணர்வைப் பொழிதலால், நீர்மை அன்புப் பண்பையும் குறித்த ஒழுக்கமாயிற்று. - -