பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

119


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 119

நிலைநிறுத்தும் கட்டுப்பாடுடையவர்களாகச் செயல்படுகிறார்கள்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்’ - 95 என்பது ஆசிரியர் கருத்து. நல்லவை நாடி இனியது சொல்வது அறிஞர்களுக்கு உரியது. எனவே அறிஞர் கடமையாக இதைச் சுட்டுவார். மதவியலாரின் படிற்றொழுக்கம் (மறைவின் இழுக்கு(Hypocrisy) ஆசிரியரால் மிகுவாகக் கண்டிக்கப் பெறுகிறது. (காண்க கூடாவொழுக்கம் அதிகாரம்)

வாழ்வியலில் தாழ்ச்சியுறும் பொழுது, பிறர் யாவரினும் ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்லையே பின்பற்றி நடக்கச் சொல்பவராய்,

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்’ - 4 15

என்னும் ஆசிரியர், ஒழுக்கம் உடையவரையே மாந்தச் சிறப்பினராகக் கருதும் கருத்து கவனிக்கத்தக்கது.

உலக நிலைகள் எவ்வளவு கீழ்மையடைந்து போயினும் குடிமை நலம் (Civism) விரும்புகிறவர்கள், தங்கள் ஒழுக்கக் கடைப்பிடிகளிலிருந்து தாழ்ந்து போகமாட்டார்கள் என்பதை ஆசிரியர் குடிமை அதிகாரத்துள் கூறுதல் காண்க.

‘ஒழுக்கமும் வாய்மையும் நானும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். - 952 இனி, சான்றாண்மை’ அதிகாரத்துள்,

‘ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். – 989 என்பதும் அக்கருத்தையே மேலும் உறுதிப்படுத்தும்.

ஆங்கிலத்தில் Discipline - ஒழுக்கம் என்று கூறப்பெறும் ஏறத்தாழ இச்சொல் அதற்குப் பொருந்துமேயன்றி, மிகச்சரி என்று சொல்லமுடியாது. இச் சொல் அல்லாமல் ஆங்கிலத்தில் வேறு சில சொற்களும் ஒழுக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் பெறுகின்றன. அவையும் அவற்றின் பயன்படு பொருள்களும் வருமாறு: