பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

5. togollusi, ogg (Religious Virtue)

மதக்கடைப்பிடி, பத்திமை, பூசை, வழிபாடு, மதம் சார்ந்த ஒழுக்க (ஆசார) நடைமுறைகள் முதலியன.

இனி, நடுவுநிலை உணர்வால் அடக்கம் தோன்றுமாகலின் அதற்குப் பின் அடக்கமுடைமை கூறப் பெற்றது. அடக்கம் தோன்றிய பின் மாந்தனிடம் ஒழுக்கவுணர்வு கால்கொள்ளும் ஒழுகுதல் பின்பற்றி நடத்தல், ஒழுக்கத்திற்கு அடக்கமே முதலுணர்வு.

அடக்கம் - மனம், அறிவு, உடல் அடங்குதல் தன்மை. ஒழுக்கம் - மனம், அறிவு, உடல் இயங்குதல் தன்மை. எனவே, ஒழுக்கமும் மனவொழுக்கம், அறிவொழுக்கம், உடல் ஒழுக்கம் எனப் பாகுபாடு பெறுகிறது.

மனவொழுக்கம் - பொய்யாமை, உண்மை, அன்புடைமை,

நடுவு நிலைமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, ஈகை, கள்ளாமை, வெகுளாமை, மானம் கருதுதல், பெருமை காத்தல் முதலியன. அறிவொழுக்கம் - புறங்கூறாமை, பயனில சொல்லாமை,

ஒப்புரவறிதல், கொல்லாமை, நட்புணர்வு, கள்ளுண்ணாமை, சூதாடாமை முதலியன. - இவ்வாறு, பல்வேறு ஒழுகலாறுகளைப் பல்வேறு கோணங்களில் வலியுறுத்திக் கூறுவதால், இஃது ஒழுக்கநூல் என்று கருதுதற்கும் ஒப்பாகும். ஒழுக்கம் இன்றெனின் தனிமாந்தச் சமநிலை கெடும்; தனி மாந்தச் சமநிலை கெடின், இல்லற அமைப்புக் கெடும்; இல்லற அமைப்புக் கெடின், குடிமைநலம் கெடும்; குடிமைநலம் கெடின், மாந்தத் தன்மை மாறுதலுற்று மீண்டும் விலங்குத் தன்மை மீதுற்று விளங்கும். இப் பேருண்மையை ஆசிரியர், -

‘ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்’ - 133 என்று நன்கு விளக்கி மக்கள் குலத்துக்கு எச்சரிக்கை செய்வார்.

ஒழுகலாறு இல்லெனின் உலகம் தன் இயல்பான நடைமுறையில் தாழ்ந்து, இழிந்து, மக்களினம் படிப்படியாய் அழிந்து மண்ணில் புதைந்து மாய்ந்துவிடும் என்று இவ் வறவாசிரியர் செய்யும் அறிவுரை அனைவரும் சிந்திக்கற் பாலது. -