பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ-2.0 ஒழுக்கமுடைமை 14

நூலாசிரியர் காலத்தில் காமம்’ என்னும் சொல் அழுத்தமாக காதலுணர்வைக் குறித்ததாகக் கொள்ளலாமே தவிர, இன்றைய நிலையில் பொருள்கொள்வதுபோல் அவ்வளவு தாழ்வாகவோ, இன்னும் சொன்னால் இழிவாகவோ கருதப் பெறவில்லை.

- சொல்லளவில் அல்லது பொருளளவில் அது காலத்துக்குக் காலம் வேறுபட்டு வந்தாலும், செயலளவில் அவ்வுணர்வு மக்களிடம் ஒரே அளவாகத்தான் இருந்து வந்திருக்கிறது; இருந்து வருகிறது; இருந்து வரும், ஏனெனில் அது மக்கள் இயங்கியல், இயற்கையியல், எதற்குமே புறம்பான நிலைகள் இருத்தல் போல் இதற்கும் இருக்கலாமே தவிர, அறவே இல்லை என்று கூறிவிட முடியாது.

எனவே, ஒழுக்கவியலை நினைக்கும் பொழுது, அதற்கு மிக அடித் தளமான ஆண்பெண் ஈடுபாட்டு நிலைகளை அஃதாவது காம வியலைப் புறந்தள்ளி விடுதற்கியலா நிலையில், அதைப் பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் கூற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏனெனில் ஒழுக்கமே அதுவென்றுதான் . அதன் துய்மைத்தன்மைதான்

என்று உலகம் பொருளறிந்து வைத்திருக்கிறது. பொய்கூறுபவனை, திருடுபவனை, குடிப்பவனை, ஏமாற்றுபவனை ஏன் கொலையாளியைக் கூட ஒழுக்கம் கெட்டவன் என்று உலகம் சொல்வதில்லை. அத்தகையவர்களைக்கூட, பொய்யன், திருடன், குடிகாரன், ஏமாற்றுக்காரன், கொலைகாரன் என்றுதான் அந்நிகழ்வுகளின் அடிப்படையில் உலகம் அழைக்கின்றது. ஆனால் காமநெறி தவறுபவனைத்தான் ஒழுக்கமில்லாதவன் என்று கூறுகிறது. இஃது ஏன் என நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். - புறவுலகத்திற்கு அஞ்சி ஒழுக்கம் காப்பது, அல்லது ஒழுக்கம் காப்பது போல்

நடப்பது அல்லது நடிப்பது ஒழுக்கம் - ஆகாது. இதனை ஆசிரியர்.

‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே தகும்’ - 271 என்று மிகவும் கண்டித்தும் எள்ளியும் கூறுவார்.

அவர் விரும்புவது உள்ளம் நெஞ்சம் அறிய ஒழுகுவது. அவரே உலகியலை முன்வைத்துக் கூடா ஒழுக்க அதிகாரத்துள் கூறுவது மிகவும் கவனிக்கத் தக்கது.

கனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - 378