பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

131


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 131

என்பதில் அவர் கூறும் மாந்தர் பொது மாந்தரே, துறவியர் மட்டும்

அல்லர்.

- }, στιςκτακτ 2 - இவற்றுக்குக் காரணம் என்ன:

ஆண் பெண் ஈடுபாடு அல்லது அதுபற்றிய உணர்வு - அஃதாவது காமவுணர்வு இயற்கையிலேயே மிக வலிவானது. அஃது ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்டதன்று. உள்ள வியலையும், உடலியலையும், பாலியலையும் அடிப்படையாகக் கொண்டது.

- ஒழுக்கவியல் இல்லறவியல், அறவியல், குமுகாயவியல், அரசியல், பொருளியல், சமயவியல் போல் மக்கள் பண்பட்ட நிலையில் அமைத்துக் கொண்டது.

- அரசியலில் எத்துணை அறநெறிகள் கூறப்பெறுகின்றன. ஆனால் அவற்றை அரசியலில் ஈடுபடுவோர் கடைப்பிடித்தா இயங்குகின்றனர்? ஒழுகுகின்றனர்?

இல்லறவியலில் எத்தனைக் கட்டுப்பாடுகள் வகுக்கப் பெற்றுள்ளன. ஆனால் அவற்றில்தாம் எத்தனை நெருடல்கள் நெகிழ்வுகள்; சரிவுகள், சாய்வுகள்!

- பொருளியலில் மாந்தரால் ஒப்புக்கொள்ளப்பெறும் சமநிலை அமைப்பு

இன்னும் ஏற்படவில்லையே, ஏன்?

- குமுகாயவியலில் எத்தனை மேடுபள்ளங்கள்!

அறவியலில் எத்தனைப் LJIT, புரட்டல்கள்!

- சமயவியலில் எத்துணை ஏமாற்றங்கள், இழுக்குகள், பூசல்கள்,

கொடுமைகள்! .

- இப்படித்தான் ஒழுக்கவியலிலும் நம் குறிக்கோள்கள் இன்னும்

மலர்ச்சியுறவில்லை. . .*

மக்கள் அனைவருமே ஏதோ ஒன்று அல்லது சில வகைகளில் இழுக்கம் உடையவர்களாகவே உள்ளனர் என்பது மிகப் பெரும்பாலும் உண்மை.

- நூலாசிரியர் காலத்தும் அந்நிலை இருந்தது. இன்றும் உள்ளது; இனியும்

இருக்கும். ஏன்? இவ்வுலகம் உள்ளளவும் இருக்கும்.

. அஃது ஏன் எனில், காமவுணர்வின் வலிவு. அங்குத்தான் ஒழுக்கமே வழுக்குகிறது. அதன் வலிமையை வீழ்த்தத்தான் கடும் முயற்சி மனத்தளவிலும், அறிவளவிலும், செயலளவிலும் தேவை என்று ஆசிரியர் கூறுவார். ※,