பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அ-2-10 ஒழுக்கமுடைமை -14

கங்ச. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் - 134

பொருள்கோன் முறை:

பார்ப்பான் ஒத்து மறப்பினும் கொளலாகும் பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்.

பொழிப்புரை ஆரியப் பார்ப்பனன் தன் பிழைப்புக்காக மனனம் செய்யப்பெற்ற

வேத மந்திர ஒத்துகளை மறந்து போனாலும், அவற்றை மீண்டும் படித்து

நினைவிற் கொள்ளுதல் இயலும். ஆனால், அவன் உயர்வுடையதாகக்

கருதிக்கொள்ளும் தன் பிறவிப்பெருமை. தன்னொழுக்கம் குறையுமானால்,

இல்லாமற் போய்விடும். .

சில விளக்கக் குறிப்புகள் :

1. பார்ப்பான் மறப்பினும் ஒத்துக் கொளலாகும் - ஆரியப் பார்ப்பனன் தன்

பிழைப்புக்காக மனனம் செய்யப் பெற்ற, வேத மந்திர ஒத்துகளை மறந்து போனாலும், அவற்றை மீண்டும் படித்து நினைவிற் கொள்ளுதல் இயலும். - - ‘’.

பார்ப்பானை, ஆரியப் பார்ப்பான் என்று வேறு பிரித்தது, தமிழப் பார்ப்பான் உளனாகலின். என்னை?

பார்ப்பான் என்பது ஒரு தொழிலடியாகப் பிறந்த சொல். தமிழர் சமய வேத, ஆகம நூல்களைக் கோயில் வழிபாட்டுக்கு அடிப்படையாகக் கொண்டு பார்ப்பதும், அவற்றின்படி கோயில் கடவுளர்க்குத் தமிழ்வழித் திருப்பூசை, திருப்பலி முதலியன செய்தலாலும் அத்திருப் பணிசெய்வார். பார்ப்பார், குருவர், குருவன்மார், குருக்கள், அந்தணர் எனப்பெற்றனர். . - ஆரியப் பார்ப்பனர், தென்னகம் வந்த பின்னர், ஏற்கனவே அரசர்க்கு மதக் கருமங்களையும் சடங்குகளையும் செய்து வந்த தமிழக் கருமகாரர்களுக்குப் பகரமாக. ஆரியப் புரோகிதர், (கிருத்திகர்) அமர்த்தப் பெற்றனர். பின்னர் அவரே கோயில் வழிபாடு செய்யவும் அற்றைத் தமிழ் அரசரால் பணிக்கப் பெற்றனர். அக்கால் அவரும் பார்ப்பார், குருக்கள், அந்தணர் எனப்பெற்றனர். அவர்கள் தமிழ் வேத, ஆகமங்களுக்குப் பகரமாகத் தங்களின் வேத நிகமங்களையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பார் ஆயினர் நச்சினார்க்கினியர் கலித்தொகை உரை)

- அவர்களுக்கு முன்னிருந்த தமிழ்ப் பார்ப்பாரிடமிருந்து இவர்களை