பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

157


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 57

வேறுபடுத்திக் காட்டவே, இவர்களை ஆரியப் பார்ப்பனர் என வழங்குதலாயிற்று. நாளடைவில், முழுக் கோயிலாட்சி வந்துற்ற பின்னர், அவரே

பார்ப்பனர் ஆயினர். (அவருள் ஒருவன் பார்ப்பான்).

அவர்கள் வேத நிகம (ஆரிய வேதவழி ஆகமங்கள் நிகமங்கள் எனப் பெற்றன) வழித்தாய மந்திரங்களை (ஒத்துகளை மனப்பாடம் செய்து, அரசக் கருமியங்களையும், கோயில் வழிபாடுகளையும் செய்து வாழ்க்கை நடத்தலாயினர்.

. அவர்கள் அவ் வோத்துகளை வழிவழியாக மனனம் செய்து வருவது, இயல்பாயிற்று. அவற்றை அவர்கள் பயிலாத நிலையிலோ, அல்லது மறந்துவிடும் நிலையிலோ அவர்கள் அப்பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப் பெறாமல், வாழ்வுப் பாட்டிற்குத் தொல்லைப்படல் நேர்ந்தது. . - - எனவேதான், இந்நிலையை முன்னிருத்தி, பார்ப்பான் வேத ஒத்துகளை மறந்தாலும் மீண்டும் படித்து அவற்றை மனத்தில் கொள்ளல் இயல்வதாகும்; ஆனால அவன், தன்னொழுக்கத்தை மறந்து, அல்லொழுக்கம் கொண்டு, இழுக்கம் எய்துவானாயின், அவன் பிறப்பிலேயே தன்னைச் சிறப்புடைய படைப்பினனாகக் கருதிப் பெருமைபட்டுக் கொள்ளும் நிலை இல்லாமற் போகும் என்று, தன்னொழுக்கத்தின் பெருமையை இவ்வழி எடுத்துக் காட்டினார் என்க 2 பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் . ஆனால், அப் பார்ப்பான் தான் பிறப்பிலேயே உயர்படைப்பினனாகக் கருதிக் கொள்ளும் தன் பிறவிப் பெருமை, தன் ஒழுக்கம் குறையுமானால், இல்லாமற் போய் விடும்

- ஆரியப் பார்ப்பான் தான் பிறப்பிலேயே உயர்புடைப்பினனாகக் கருதிக்கொள்ளும் பெருமை, அவர்களின் வேதத்தில், வர்ணாச்சிரம தர்ம நூல்களில் சொல்லப் பெற்றிருக்கிறது.இதனைப் பிராமணர்கள், பிரம்மன் என்னும் படைப்புக் கடவுளினது முகத்தினின்றும், சத்திரியர்கள் (அரசகுலத்தினர்) அவனது தோளினின்றும் வைசியர்கள் (வணிகர்கள்) அவனது தொடைகளின்றும், சூத்திரர்கள் (அவர்களல்லாத தமிழினத்தவர் உட்பட்ட பிறர் அனைவரும் அவனது கால்களினின்றும் பிறந்தனர் என்னும் பொருள்படும். கீழ்க்காணும் (ரிக்வேதம் செய்யுளால் கண்டு கொள்க - . . . . . . . .

பிராமனோசிய முகமாகித் பாகு ராஜன்ய க்ருத: