பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

161


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 

கங்ரு. அழுக்காறு) உடையான்கண் ஆக்கம்போன்று) இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு - 135

பொருள்கோள் முறை :

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை.

பொழிப்புரை பொறாமை, கெடுநினைவு, தீய எண்ணம் முதலிய மனக் கசண்டுகள் உடையவனிடம் மக்கட்கு ஆக்கம் தரும் நல்விளைவுகள் இல்லாததுபோல், தன்னொழுக்கம் இல்லாதவனிடம் வாழ்க்கை மேம்பாடு இருப்பதில்லை.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இஃது, அகவொழுக்கம் இல்லாதவனிடம் மக்கள் நலம் கருதும் ஆக்கமான விளைவுகள் இல்லாததுபோல், புறவொழுக்கம் இல்லாதவனிடம் வாழ்க்கை மேம்பாடு இருப்பதில்லை - என்பதைக்

2. அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று பொறாமை, கெடுநினைவு, தீய எண்ணம் முதலிய மனக்கசண்டுகள் உடையவனிடம், மக்கட்கு ஆக்கம் தரும் நல்விளைவுகள் இல்லாதது போல்.

‘அழுக்காறு’ என்பது பொறாமை மட்டுமன்று அழுக்கு ஆறு என்று பிரிபடும் இச்சொல், அழுக்கு நினைவுகள் அத்தனையும் குறிப்பதாகும். 3 : * : , :::3%

அழுக்கு நினைவுகள் - அழுக்கு வழிகள் உள்ளக் கசண்டுகள். உள்ளத்தின் தீய நினைவுகள் அனைத்துக்கும் பொறாமை உணர்வே அடிப்படையாக இருப்பதால், அப்பொருளையே முகாமையாகக் கொள்ள வேண்டி உள்ளது:

பொறாமை உணர்வு கொண்ட னமுள்ளவன், அதைத் தொடர்ந்து, கெடுநினைவு, தீய எண்ணங்கள், தீய செயல்கள் முதலிய படிப்படியான கொடுமை நினைவுகளிலேயே தன் சிந்தனையைச் செலுத்துவான் ஆகலின், அவனிட்ம் பொதுந . ம்ே கருதும் ஆக்கமான எண்ணங்களும், செயல்களும் தோன்றுவதற்கு வழியில்லாமல் போகிறது.

உள்ளதாதல்வேறு உடையதாதல் வேறு உள்ளது 3கொண்டிருப்பது. தேவையில்லையெனில்: