பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$64 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

- இவ்வாறு, ‘அழுக்காறு உடையார் கண் செல்வம் இல்லாமல் இல்லை; செல்வம் இருக்கும். எனவே இங்கு ஆக்கம் என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் கொள்ளுதல் பொருந்தாமற் போகும் என்க.

ஆகவே, அதற்கு “அறவுணர்வான் வரும் அல்லது செய்யப் பெறும்

ஆக்கம் என்றே பொருள் பெறலாகும்.

. இப்பொருளையே நூலாசிரியரும் அழுக்காறாமை அதிகாரத்தும் வலியுறுத்துவர். அதே கருத்தைத்தான், இங்கு வலியுறுத்தி, ஒழுக்கக் கருத்தோடு அதனை இயைபு படுத்திக் கூறுவார் என்க. அஃது இது;

‘அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான் - f3 3. ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை - தன்னொழுக்கம் இல்லாதவனிடம்

வாழ்க்கை மேம்பாடு இருப்பதில்லை. -உயர்வு என்பதற்குக் காலிங்கரைத் தவிர உரையாசிரியர் அனைவரும் உயர்வு என்றே பொருள் கண்டனர். காலிங்கர் ஒருவர் தாம் பெரிய மேம்பாடு என்று பொருள் கொண்டுள்ளார். அது பாராட்டத்தக்கது. - ஒழுக்கமில்லாதவர்களும் பலநிலைகளில் சிறந்தே விளங்குவதும் தவிர்க்க முடியாத உலகியலாக உள்ளது. எனவே, உயர்வு என்னும் சொல் வாழ்க்கை நிலையைக் குறித்ததாகக் கொள்வது தனியொழுக்கத்தைப் பற்றிக் கவலையுறாத இக்காலத்திற்குப் பொருந்தாத கருத்தாகி விடுகிறது.

ஆனால், -- லாதவனை அனைவரும் மேலானவனாகக் கருதுவது இல்லை. பெருமையாகவும் நினைப்பதில்லை. எனவே அவனுடைய சிறப்பு நிலைகளும் அவனை மேம்பட்ட ஒருவனாகக் கருதச் செய்ய உதவுவதில்லை. அந்நிலையிலுள்ளவனுடைய பதவியாலும் பட்டத்தாலும் அவனை ஒருவாறு செல்வச் சிறப்பும் அறிவுச் சிறப்பும் கொண்டவனாக மக்கள் கருதுவார்களே தவிர, அவன் வாழ்க்கையை மேம்பாடு கொண்டதாக - மக்கள் பின்பற்றத் தகுந்ததாக நினைப்பதில்லை.

நூலாசிரியர் காலத்தில், ஒருவேளை ஒழுக்கமில்லாதவனை உயர்நிலையில் அமர்த்த அன்றைய ஆட்சியும், குமுகாயமும் “மறுத்திருக்கலாம். அவனுக்கு உயர்வு ஏதும் தராமலும் இருந்திருக்கலாம். ஆனால், இன்று அந்நிலை அடியோடு மாறிவிட்டது என்று கூறமுடியாதெனினும், பெரும்பாலும்,அவ்வாறு இல்லை என்பதை

மறுத்தற் கியலாது.

4. , ஒழுக்கமிலாதவனிடம் வாழ்க்கை மேம்பாடும், பெருமையும்