பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

165


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 5

குமுகாய மதிப்பும் இராது என்பதைக் குறித்ததால், முன்னதன் பின்னர் வைக்கப்பெற்றது.

கங்சு ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்(கு) அறிந்து. - 136

பொருள்கோள் முறை :

உரவோர், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து, ஒழுக்கத்தின் ஒல்கார்.

பொழிப்புரை மனவுரமுள்ள அறிஞர், ஒழுக்கக் கேட்டினால் வரும் குற்றங்களாகிய இழிவு, பழி, கேடு முதலியன ஏற்படுவதை முன்னரே அறிந்து, தாம் கடைப்பிடித்தொழுகும் தன்னொழுக்கத்தில் குறைவுபடார்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - மனவுரமுள்ள அறிஞர்.

ஒழுக்கக் கேட்டினால் வரும் குற்றங்களாகிய இழிவு, பழி, கேடு முதலியன ஏற்படுவதை முன்னரே அறிந்து,

- உரவோர் - மனவுரமுள்ளவர் அறிஞர். - இழுக்கம் - ஒழுக்கக் கேடு, அதனால் இழுக்கு வருவதால் இழுக்கம்

ஒழுக்கக் கேட்டைக் குறித்தது. ‘. . . . . - ஏதம் - குற்றம். இங்கு இழுக்கத்தால் வரும் இழிவு, பழி, கேடு

முதலியவற்றைக் குறிக்கும். -

படுபாக்கு - படுவதை, உண்டாவதை, ஏற்படுவதை. பாக்கு - வழக்கிழந்த ஓர் எதிர்கால வினையெச்ச ஈறு.

(எ-டு) உண்பாக்கு வந்தான். - ஒழுக்கக் கேட்டினால் எந்த எதிர்நிலை ஏற்படவில்லையாயினும், அதனால் வரும் இழிவையும், பழியையும் கேட்டையும் தவிர்க்கவியலாது என்க. - - - இழிவு பலரும் இழிவாகக் கருதும் தாழ்ச்சி பழி பெண்ணடிமை என்னும் பழித்தலுக் காளாவதும், பெண் பழிக்கு

ஆளாவதும்,