பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அ-210 ஒழுக்கமுடைமை 14 சில விளக்கக் குறிப்புகள் :

1. இது, மனம், அறிவு, உடல் ஆகியவற்றால் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர், வாய்தவறியுங்கூட, தீமை பயக்கின்ற சொல்லையோ கருத்தையோ கூறுதலும் பொருந்தாது கூடாது என்னும் நாவொழுக்கம் கூறியது. 2. தீய வழுக்கியும் வாயால் சொலல் - தீமை பயக்கின்ற சொல்லையோ,

கருத்தையோ தம் நல்லுரை பகரும் வாயால் சொல்லுதல். தீய தீமை பயக்கின்ற சொல்லையோ, கருத்தையோ என்று இரண்டையும்

அடக்கிக் கூறினார்.

உரையாசிரியருள் மணக்குடவர், பரிதியார், காலிங்கர் ஆகியோரும், பாவானர் உள்ளடங்கிய பலரும் ‘தீய’ என்னும் சொல்லுக்குத் தீய சொற்கள் என்றே பொருள் கூறியுள்ளனர்.

அஃது ஒருவகையில் நிறைபொருள் ஆகாது. திச்சொல்’ என்னினும் யாப்புப் பிழையாதிருக்க, தீய என்று பெய்ததாலும், அது, பன்மையும் குறித்ததாலும், தீமை தரும் சொல்லும் கருத்தும் என்றே பொருள் கொள்ளுதல் தக்கது. என்னை? தீய சொற்களின்றி, இடக்கரடக்கலாகத் தீய கருத்தையும் ஒருவர் கூறவியலும் ஆகலான், என்க. (எ-டு) , அவன் தன் தலைமேல் இருப்பதற்குச் சமம் (தலைமேல் இருப்பது மயிர்) 2. அவனை என் காலில் கிடப்பதை எடுத்து அடிப்பேன்.

(காலில் கிடப்பது செருப்பு) .

மயிர், செருப்பு இரண்டும் தீயசொற்கள் அல்வாயினும் கூறுகின்ற உணர்வால் அவை தீயவாயின. இங்குக் கருத்துகள் தீயவை. ஒருவரை

வழுக்கியும் - நாத் தவறியும், வாய்தவறியும் , மறந்தும் என்று முன்னையர் பொருள் தருவதும் சரியன்று. அது மனத்தினது உணர்வு ஆகையான். வாயால் சொலல் - சொல்லுதல் வாயேயெனினும் வாயால் என்று கூறியது,

ஒழுக்கமுடையவராகலின் அவர் வாய் நல்லுரை கூறிப் பழகியிருக்கும் ஆகலான், அந் நல்லுரை பகரும் வாயால் என்று சிறப்பித்தார்.

தீய சொல்வது மனத்தில் நினையாமலும், அறிவால் சிந்தியாமலும், பிறர் சொல்லக்கேட்ட பழகுணர்வால், வாய் முந்துணர்வால்