பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அ-2-10 ஒழுக்கமுடைமை 14

அவரைத் தலைசிறந்த அறிஞராகக் கருதுவதற்கும் தயக்கத்தைத் தருகிறது. என்னை? .

‘அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்iழ் இல்லா தவர்’ - 997 என்பாராகலின்,

சொல்லுகின்ற சொற்களிலும் வருண வேறுபாடு கற்பிக்கும் அவரது

மாந்தப் பண்பின்மைதான் என்ன !

அவருடைய உரை, நூலாசிரியரின் தூய்மையான அறவுணர்வை . பொதுமை உணர்வை, வருண வேறுபாடுகளையும், ஆரிய வேத வழியான, பொதுமாந்தவியலுக்குப் பொருந்தாத உரைகளைக் கூறி அவர் மாசுபடுத்தும் நோக்கந்தான் என்னவோ? அவர் போலியரே அறிவர் என்றுகூறி அகலுக.

3. இஃது, ஒழுக்கமுடையவர், தாம் கூறும் சொல்லிலும் கருத்திலுங்கூட

விழிப்பாய் இருத்தல் வேண்டும் என்பது கூறியது.

கச0 உலகத்தோடு) ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார் * . . . . . .

பொருள்கோள் முறை :

பலகற்றும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் அறிவிலாதார்.

- 40

பொழிப்புரை : Lalit (அறிவு, அறம், கலை முதலிய நூல்களைக்

கற்றவரானாலும், உலகின் தேர்ந்த பண்பியல் நிலைகளோடு பொருந்தி

ஒழுகத் தெரியாதவர்கள் அறிவில்லாதவர்களே!

சில விளக்கக் குறிப்புகள் :

1. பல கற்றும் - பலவகையான அறிவு, அறம், கலை முதலிய நூல்களைக்

கற்றவரானாலும். - உலகில் கற்பவரெல்லாரும் விரும்பிக் கற்பது அறிவு நூல்களும், அறநூல்களும், கலைநூல்களுமே யாகும். அவற்றின் பின்னரே, அறிவியல் நூல்களையும், அளவியல் நூல்களையும், தொழிலியல் துண்தொழிலியல், மெய்ப்பொருள் நூல்களையும் அவர்கள் தேவை நோக்கியும், சிறப்பு நோக்கியும் கற்கப் புகுவர். என்னை: