பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 அ-2-11 பிறனில் விழையாமை 15

மற்று, பரிமேலழகரும் பாவாணரும் கூறுவதுபோல், இஃது, ஒழுக்கமுடையார் மாட்டே நிகழ்வது ஆகலின், ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது என்பது, அத்துணைப் பொருத்தமுடையதன்று என்னை? அவர் ஒழுக்கமுடையாராயின் இக் குற்றத்தின்பால் படார் ஆகலின்.

கசக. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல் - #41

பொருள் கோள் முறை :

ஞாலத்து, அறம்பொருள் கண்டார்கண் பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை இல்.

பொழிப்புரை உலகில், அறத்தினது உண்மைப் பொருளைத் தெளிவாக நன்கு உணர்ந்துகொண்டவர்களிடத்துப் பிறனது இல்லறத்திற்குப் பொருளாகி நிற்பவளாகிய அவன் துணைவியை விரும்பி, அவளிடம் தவறாக ஒழுகும் பேதைமை இருப்பதில்லை.

சில விளக்கக் குறிப்புகள் :

1. ஞாலத்து அறம் பொருள் கண்டார்கண் - உலகில் அறத்தினது உண்மைப் பொருளைத் தெளிவாக நன்கு உணர்ந்து கொண்டவர்களிடத்தில். - ஞாலம் - எதனது பற்றும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும்

உலகம்.

அறம், பொருள் - பொதுமை அறத்தினது உண்மைப் பொருளை. - கண்டார்கண் - தெளிவாக நன்கு உணர்ந்து கொண்டவர்களிடத்தில் - ‘அறம்பொருள் என்பதற்கு இதுவரை பொருள் கண்ட உரையாசிரியர் அனைவரும் அறநூலையும் பொருள் நூலையும் என்றே பொருள் கூறியுள்ளனர். - - - பிறனுக்கு உரியாளை விரும்புவது பொதுமை அறத்தின் வழிப்பட்ட குற்றமே தவிரப் பொருள் வழிப்பட்ட குற்றமன்று என்று தெளிதல் வேண்டும். அது பிழையென்றுணர்வதற்கு அறவுணர்வறிவே போதுமானது. பொருளியல் அறிவு அதற்குத் தேவையில்லை. பொதுவொழுக்கம் அறத்தின்பாற்பட்டது. . . .” ---