பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

189


திருக்குறள்-மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 9

- பெட்டு ஒழுகுதல் விரும்பி நடத்தல்.

- இங்கு ஒழுகுதல் என்னும் சொல் விரும்பி நடக்கும் அனைத்துச்

செயல்களையும் குறித்தது,

- அனைத்துச் செயல்களாவன, அடிக்கடி இல்லம் வருதல், தேவையின்றி அவளிடம் பேச விரும்புதல், வரைதுறையின்றிப் பொய்யாய் நகைத்துப் பேசுதல், ஏதாம் ஒரு பொருளைக் கொடுத்தல், வாங்கல், கணவனில்லாத நேரம் பார்த்தோ, வீட்டில் யாரும் இல்லாமல் தனிமையில் உள்ள நேரம் பார்த்தோ வருதல், உரையாடல், அவளுக்கோ அவளுடைய கணவனுக்கென்றோ, அவளின் குழந்தைகளுக்கென்றோ, விருப்பமான அல்லது தேவையான ஒரு பொருளை வாங்கி வந்து தனிமையில் அவளிடம் தருதல், அவளது உடல்நலம் உசாவுதல், அதில் அக்கறை காட்டல், அவளின் உடைகளை, நகைகளை, தேவைகளை மற்றும் அழகினைப் பற்றி அவளிடம் தனிமையில் உரையாடுதல், அவளும் கணவனும் விட்டிற்கோ விருந்திற்கோ பொழுது போக்கிற்கோ வரும்படி அவளிடம் அழைப்பு விடுத்தல், அவள் குடும்பத்தின் பொருள் தேவையை அவள்வழி அறிந்து அவளிடமே தனிமையில் உதவுதல் போலும் பலவகைச் செயல்கள் என்க. -

- பேதைமை - சங்குக் கூறப்பெறும் அனைத்தும் வேண்டுமென்றும், பொய்யாகவும் செய்யப்பெறும் செயல்களும் அவற்றுக்கான மனவிழைவும், அவற்றின் விளைவு அறியாமையால் நிகழ்த்தப் பெறுவனவாகையால் பேதைமை என்றார்.

3. இஃது, இல்லறவியலில் நிகழ்த்தப்பெறும் தீய ஒழுகுதல் ஆகையானும், அறவுணர்வு பற்றிக் கற்றுணர்ந்தார்கண் நிகழக்கூடாது என்பதானும் இவ்வதிகார முதலிலேயே கூறினார் என்க.

கசஉ. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரில் பேதையார் இல். - - 142

பொருள்கோள் முறை : இயல்பு பொழிப்புரை பொதுமை அறத்தைக் கடைப்பிடியாமல் அதற்குக் கீழே

நின்றவர்கள் எல்லாருள்ளும், பிறனது இல்லின் புறவாயிலிற் போய், அவன் மனையாளுக்காகக் காத்து நின்றாரைவிடப் பேதையார் இல்லை.