பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“H2 அ-2-1 பிறனில் விழையாமை 15

holiness, புனிதச் செயல், நற்செயல், தெய்வத்தன்மையுள்ள

சங்கு இவற்றால் ஆங்கிலேயர்களுக்கும் இச்செயல்கள் விளங்குவதில்லை

என்றே கருதவேண்டியுள்ளது. 2. பிறன்கடை நின்றாரில் பேதையர் இல் - பிறனது இல்லின் புற வாயிலிற் போய், அவன் மனையாளுக்காகக் காத்து நின்றார்ப் போலப் பேதையர் இல்லை. பிறன்கடை நின்றாரில் பிறனது இல்லின் புறவாயிலிற் போய், அவன்

மனையாளுக்காகக் காத்து நின்றாரைவிட

பிறன்கடை என்பதற்கு பிறனது வாயிற் கண் என்றே பரிமேலழகரும்

பிறரும் பொருள் கொண்டுள்ளனர்.

‘கடை’ என்பதற்கு வாயில்’, ‘கதவு என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆனால், களவின் காரணமாகவும், அச்சத்தின் காரணமாகவும் பிறன்மனை தயக்கும் பேதையர் நேரிய முன் வாயிலிற் சென்று நிற்பர் என்பதினும், வீட்டின் பின்புறம் உள்ள புறவாயிற் கண்ணே, அவளுக்காகக் காத்து நிற்பர் என்பதே உலகியற் பொருத்தமும். மனவியற் பொருத்தமும் உடையதாம், என்க.

இனி, பேதையார் என்பதற்கும் பரிமேலழகர், - ‘அறமும் பொருளும் இழத்தலே யன்றிப் பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றாராகலின் பேதையாரில் என்றார்

என்று விளக்கம் தருவார். . - இதில் இன்பம் இழப்பதால், பேதை என்பது அத்துணைப் பொருந்திய பொருளன்று. அச்சத்தால் தாம் பெறும் இன்பத்தில் குறைவு தோன்றலாம் எனினும், அவர்கள் இன்பத்தை இழப்பது என்பது மனவியற்கும் உடலியற்கும் பொருந்துமாறில்லை. என்னை? திருட்டு மாங்காய் சுவையுடைத்து என்றல் உலக வழக்காகலின். - இன்பம் இல்லையாயின், அச்சம், நாணம், மானமிழப்பு, பழி, தண்டம், பூசல், உயிரிழப்பு ஆகிய இத்தனைத் தாக்கங்களையும் மீறி, இத் தீயவொழுக்கம் மக்களிடைத் தோன்றிப் பரவாது. எனவே, இன்பம் இழத்தல் காரணமாக நூலாசிரியர் பேதையார் என்று குறித்திரார். - அறச்செயலில் ஈடுபடாதவர் எல்லாரும் அஃதாவது, அறன்கடை நின்றார் யாவரும் அறத்தைப் பின்பற்றற்குரிய கடுமை உணர்ந்தும், இயலாமை காரணமாகவும், பொருளின்மையாலும், அல்லது பொருள்கருதி அல்வழிகளைக் கடைப்பிடிக்கும் நசையாலும், பிற பதவி,