பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

197


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 197

கசசு பகைபாவம் அச்சம் பழி.என நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண். - 146

பொருள் கோள் முறை :

இல்இறப்பான் கண் பகை, பாவம் அச்சம், பழி - என நான்கும் இகவாவாம்.

பொழிப்புரை பிறனது இல்லம் சென்று, அவன் மனைவியிடத்து முறை தவறி நடப்பானிடத்து, (அவளுடைய கணவன் மற்றும் உறவினரிடமிருந்தும், தன் மனைவி மற்றும் உறவினரிடமிருந்தும் வரும் பகையும், (அந்நிகழ்வால் வரும்) அறக்கேடும், அத் தீயவொழுக்கம் என்றேனும் ஒருநாள் வெளிப்பட்டுவிடுமோ என்னும் அச்சமும், (அவ்வாறு வெளிப்பட்டவிடத்து வரும் பழியும் ஆகிய நான்கு விளைவுகளும் நீங்காமல் பொருந்துமாம்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இல்இறப்பான் கண் - பிறனது இல்லம் சென்று, அவன் மனைவியிடத்து

முறைதவறி நடப்பவனிடத்து. 2. பகை - அவளுடைய கணவன் மற்றும் உறவினரிடமிருந்தும், அதே போல் தன்மனைவி மற்றும் தன் உறவினரிடமிருந்தும் வரும் பகையும்; 3. பாவம் - அந்நிகழ்வால் வரும் அறக்கேடும் (பாவம் என்னும் சொல் விளக்கத்திற்குரிய முழு விளக்கமும் 142ஆம் குறள் விளக்கத்துள் காண்க)

‘பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேரல் அறன் அன்றே! - - நீதிநெறி விளக்கம்:76 ‘பிறன்மனை புகாமை அறம்எனத் தகும்’ -

- கொன்றை வேந்தன்:61 என்றார் பிறரும். 4. அச்சம் - அத்தியவொழுக்கம் என்றேனும் ஒருநாள் வெளிப்பட்டு

விடுமோ என்னும் அச்சமும்,

‘பிறன் தாரம் - நச்சுவார்ச் சேரும் பகையழி பாவமென்று) அச்சத்தோ டிந்நாற் பொருள்’ - நாலடியார்:82

‘புக்கவிடத்து) அச்சம் போதரும் போது) அச்சம்; துய்க்கும் இடத்து) அச்சம் தோன்றாமல் காப்பு அச்சம்; எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல் - நாலடியார் : 83