பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

203


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 2O3

‘எவ்வகையான உலக மாறுதல்களுக்கும்

தந்நிலை திரியாதவர்’ - 989 ‘பிறரை இகழாதவர் - 995 ‘மக்கள் பண்புடையவர்’ - 998 “தீமை செய்வதற்கு நாணுபவர்’ - 1014 ‘பிறரிடம் போய்த் தமக்கென்று இரவாதவர்’ - #054 ‘ஒருமுறை சொன்னால் செய்யும்

மனப்பாங்கு உடையவர்.’ - 078

- இத்தகைய சீரிய குணநலன்களும், பண்பாடுகளும் கொண்டவராக இருப்பினும் காமவுணர்வு மிகவும் வலிந்த தீப்போன்றதாகலின் (159) சான்றாேரும் அக்கால் மனம் இடறாது எச்சரிக்கையாக இருத்ல் வேண்டும் என்றார்.

- அறன் ஒன்றோ : அறநெறி ஒன்று மட்டுமோ. - ஒன்றோ எண்ணிடைச் சொல். - ஆன்ற ஒழுக்கு அமைந்த ஒழுக்கம். ஆன்ற நிறைந்த, மேலான, உயர்ந்த, வலிய, சிறந்த என்ற பொருளும்

தருவது. 3. அறவழியில் இல்வாழ்க்கை ஆற்றுதல், சான்றோர்க்கும் இயல்பாகலின்,

முன்னதன் பின் இதனைக் கூறினார், என்க.

கசக, நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறற்குரியாள் தோள்தோயா தார். - #49

பொருள்கோள் முறை :

நாமநீர் வைப்பில் நலக்கு உரியார் யார் எனின் பிறற்கு உரியாள் தோள் தோயாதார்.

பொழிப்புரை : அச்சம் தருகின்ற கடலால் சூழக்கொண்டது போக, எஞ்சிய இருப்பாக உள்ள நிலப்பகுதியின்கண் வாழ்கின்ற மக்களினத்துள், அனைத்து நன்மைகளையும் பெறுதற்கு உரியவர் எவர் எனில், பிறனுக்கு உரிய ஒருத்தியினது தோள்மேல் சாய்ந்து படியாதவர். . &