பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 அ-2-11 பிறனில் விழையாமை 15 சில விளக்கக் குறிப்புகள் :

1. இது, மக்களுள் எல்லா நலன்களுக்கும் உரியவர் எவர் எனப்

பொதுமைப் படுத்திச் சொன்னது.

2. நாமநீர் வைப்பில் - அச்சம் தருகின்ற கடலால் சூழக் கொண்டது போக, எஞ்சிய இருப்பாக உள்ள நிலப்பகுதியின் கண் வாழ்கின்ற மக்களினத்துள்.

நாமம், நீர், வைப்பு - என்னும் மூன்று சொற்களை இணைவாகப் பொருத்தித் தாம் கருதிய முழுப் பொருளையும் அடக்கிக் காட்டியுள்ள ஆசிரியர்தம் சொல்திறனும் பொருள் திறனும், உலக நிலநூலறிவும், அஃகி யகன்ற அறிவாழமும் எண்ணிப் போற்றுதற்கும் மகிழ்தற்கும் வியத்தற்கும் உரிய வென்க. நமதருமைச் செந்தமிழ்த் திருமொழியின்கண் அல்லது வேறெம்

மொழியினும் இத்தகு சொல்லடைவுத் திறன் வாய்த்தல் அரிது. - நாம் . அச்சம் என்னும் பொருள்தரும் உரிச் சொல்.

பேம்நாம் உரும்என வரூஉம் கிளவி ஆமுறை மூண்றும் அச்சப் பொருள - தொல் : 848. ‘நாம் என்னும் உரிச்சொல் நாம என ஈறு திரிந்து நின்றது. - நாம நீர் . அச்சம் தரும் கடல். கடல் அச்சம தருவது என்றது, அதன் ஆழமும், அகலமும், உள்ளே உயிர் வாழும் உயிர்கொல் உயிரினங்களும், அதனுள் இயங்கும் சுழலும் சூறாவளியும், எழுச்சியும் வீச்சும் முதலியன கொண்டு என்க. நீர் வைப்பில் - கடல் நீர் சூழக் கொண்டது போக, எஞ்சிய இருப்பாக

உள்ள நிலப்பகுதியுள் வாழ்கின்ற மக்களினத்துள். வைப்பு எனும் சொல் எச்சமாக வைக்கப் பெற்ற எச்சமாக இருக்கின்ற நிலம் - என்று பொருள்தரினும், இங்குப் பேசப் பெறுவது அதில் வாழ்கின்ற மக்களைப் பற்றியதாகலின் எனும் உய்த்துணர்வு கொண்டு பொருள் விரிவு பெறுகிறது என்க. 3. நலக்கு உரியார் யார் எனில் - எல்லா நன்மைகளையும் பெறுதற்கு

உரியவர் எவர் எனில், -

நலம் + அத்து + இன் + கு எனும் சொற்பகுப்பில் உள்ள அத்து, இன் ஆகிய சாரியைச் சொற்கள் தொக்கி, முதலும் ஈறும் சேர்ந்து (நலம்+கு ‘நலக்கு என்று நின்றது.