பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 அ-2-1 பிறனில் விழையாமை 15

சூழப் பெற்றது போக எஞ்சிய நிலப்பகுதியாகிய உலகத்து’ என்று தேவையின்றி உவமைப் பொருளை வண்ணித்துக் கூறியது ஏன் எனில், அஃதன்று: உலகம் முழுமையும் மக்களின் முழு உரிமைக்கும் உகந்தது தான் எனினும், அதில் அதனதன் ஆளுமைப் பகுதி நிலமென்றும், கடலென்றும் இயற்கையாகவே பிரிக்கப் பெற்றிருத்தல் போல், இம் மக்களினத்துள்ளும் அவரவர் ஆளுமைக்குள்ள பகுதி அவரவர் உரிமைக்கு உள்ளதே என்பதை உணர்த்தவும்,

பிறன் ஆளுமை உரிமைக்குட்பட்ட பெண் ஒருத்தியைத் தான் போய் ஆள முயலுதல், பொதுமையான இயற்கையறம் அன்று என விளக்கிக் கூறவுமே, என்க.

- அதினும், வெறும் கடல் என்னாது, அச்சம் தரும் கடல் என்றது, அவ்வாறு பிறன் ஆளுமை உரிமையில், தான் குறுக்கிட்டுப் போய் மேல் ஆளுமை பெற நினைப்பது, பின் விளைவு நோக்க, அச்சம் தருவதாம் என்றும் விளக்கவே என்க. என்னை?

நிலத்துள்ளார் அனைவரும் சேர்ந்து முனையினும், கடல் நீரை வென்றி

கொள்ளுதல் இயலாது எனும் உத்தி கூறி.

‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ - 428

என்றும் அறிவு தெருட்டினார் என்க. 7. முன்னைய குறளில் சான்றோர்க்குக் கூறியவர், இதில் பொதுவில்

நலன் வேண்டுவார் அனைவர்க்கும் கூறியதால், அதன் பின்னர் இது வைக்கப் பெற்ற தென்க.

கரு0. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று. - #50

பொருள்கோன் முறை : இயல்பு.

பொழிப்புரை : அறச் செயல்களைக் கடைபிடியாத ஒருவன், அறமல்லாதவற்றையே செய்யினும், அவன், பிறனது இல்லற எல்லைப்

பட்டு நிற்பாளின் பெண்மை நலத்தை விரும்பாமலிருப்பது அனைவர்க்கும்