பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

209


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 209 சொல்லாட்சித் திறனையும் மிகச் சிறந்த நல்லுளத்தையும் காட்டி நிற்பது, அறிந்து மகிழ்தற்குரியது. அவையும், அவற்றின் பொருள்களும் வருமாறு:

பிறன் பொருளாள் (141 - பிறனது இல்லறத்திற்குப் பொருளாகி நிற்பவள்.

பிறன் இயலாள் (147) - பிறனுடைய இயங்குதலுக்கத்துணையாகியவள்.

, பிறன்மனை (148) - பிறனுடைய மனைக்கு உரியவள்.

4

, பிறற்குரியாள் (149) - பிறனுக்கு உரிமையுடையவள். 5. பிறன்வரையாள் (150 பிறனது இல்லறத்திற்கு எல்லைப்பட்டு நிற்பவள்.

இது, மற்ற அறச்செயல்களைச் செய்யாமல், அறமல்லாத செயல்களையே செய்பவன், பிறனுக்குரியவளை விரும்பாமல் இருப்பானாயின் அஃது எல்லார்க்கும் நன்றாம் என்று முடித்துக் கூறியதால் அதிகார இறுதிக்கண் நின்றது. இ

5.