பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

211


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 21

பொறுத்தல் - உடல் சுமையைப் பொறுத்தல்.

‘சிவிகை பொறுத்தான் - 37 ‘யாக்கை பொறுத்த நிலம்’ - 239 ஆற்றுவார் மேற்றே பொறை” - 1027

தாக்கு - தாங்கு. உடலுக்கு வருகின்ற தாக்கங்களைத் தாங்கிக் கொள்ளுதல்

தாங்குதல் பொறுத்துக் கொள்ளுதல்.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி’ - 733 இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை’ - 990 நோ - நோய் - நோன்றல் - நோன்மை - பொறுத்தல், நோன்று கொள்ளுதல் பொறுத்துக் கொள்ளுதல், உடல்நோயைப் பொறுத்துக் கொள்வது போல்.

நோற்பாரின் நோன்மை உடைத்து - 48 உற்ற நோய் நோன்றல்’ - 267

பார் - நிலம் - பாரம் - சுமை கனம்.

ஏல் ஏந்து ஏற்றுக்கொள்ளுதல். ஏந்து ஏந்தல் - தாங்கிக்கொள்ளுதல்.

‘பிழைத்த வேல் ஏந்தல் இனிது - 772

இவ்வகையில், 1. உடல் சுமைபோல் வரும் மனச்சுமையைப் பொறுத்துக் கொள்ளுதல். 2. உடலுக்கு வருகின்ற தாக்கங்களைத் தாங்கிக் கொள்ளுதல் போல், மனத்திற்கு வரும் தாக்கங்களையும் தாங்கிக் கொள்ளுதல்.

3. நோயை உடல் நோன்று கொள்ளுதல் போல், மனத்துக்கு நோய்போல் வரும் துன்பங்களையும் நோன்று கொள்ளுதல். .

4. நிலம் அதன் மேலுள்ள சுமைகளை ஏந்தி ஏற்றுக் கொள்ளுதல் போல், மனம் அதற்கு வரும் எண்ணச் சுமைகளையும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அஃதாவது தாங்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பவற்றை நன்கு விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். .

, பிற்கால உரையாசிரியர் சிலர் பொறையுடைமையைப் பொறுமை உடையவராய் இருத்தல் என்று பொருள் கூறுவர். அது பொருத்தமின்மையாதல்

பொறுமை வேறு பொறையுடைமை வேறு.