பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அ-2-12 பொறையுடைமை 16

இங்குக் குறிப்பாகக் கிழவன் கணவனையும் நிலம் இல்லாளையும்

குறித்தன. விளக்கம் ஆண்டுக் காண்க)

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல் - 1625 இங்குப் பிறந்தஇல் என்னும் இணைச்சொல், பொதுவாகத் தான் பிறந்த நிலத்தையும் அஃதாவது நாட்டையும், இல் என்னும் தனிச்சொல் மறைவாக மனைவியையும், ஒருவன் என்பது அவள் கணவனையும் குறித்தன. விளக்கம் ஆண்டுக் காண்க) -

இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலம்என்னும் நல்லாள் நகும்’ – i40 இங்கு இருப்பார் என்பது பொதுவாக இல்லாது வறுமையுற்ற ஒருவனையும், மறைவாகக் கணவனையும், நிலம் என்னும் நல்லாள் பொதுவாக விளைநிலத்தையும், மறைவாக மனைவியையும் குறித்தன. விளக்கம் ஆண்டுக் காண்க)

‘புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீர்இயைந்து) அன்னார் அகத்து.’ - 1323 இங்கு நிலம் மனைவியையும், நீர் கணவனையும் குறித்தன. விளக்கம்

ஆண்டுக் காண்க) - இங்கு, இவ்வெடுத்துக் காட்டுகளின்வழி, நிலம் என்னும் இல்லக் கிழத்தியால் ஒரோவிடத்து இழிவு நேரினும், அதைப் பிறனொருவன் செய்யினும், அதனால், தன் இல்லற நல்வாழ்வுக்கு ஊறுபாடு நேரினும், அக்கொடுமையினையும் பொறுத்துக் கொள்ளுதல் தலையாய அறவுணர்வேயாம் என்னும் முந்தைய அதிகாரத் தொடர்கருத்தை, அதிகாரத் தலைப்பால் மட்டுமன்றி, (காண்க : முன்னுரை இறுதிப் பத்தி இவ்வதிகாரத் தொடக்கப் பாடலாகிய இதனினும் இயைபு காட்டிக் குறிப்புணர்த்தினார் என்பது உணர்த்த வேண்டி என்க. .ே இதற்கு, மணக்குடவர்

இதுபொறுத்தானென்று இகழ்வாரில்லை; அதனைத் தலையாகக் கொள்வார் உலகத்தார் என்றது - என்று விளக்கம் தருவது சிறப்பு, T6575,