பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 அ-2-12 பொறையுடைமை 16 நூலாசிரியரும் இந்நூலுள் மறத்தல் உணர்வைக் குறிப்பிடும் இடங்களில்

எல்லாம் அறிவை முன்வைத்தே கூறுதல் காண்க. ‘அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு’ - 32

இங்கு நன்று தீதுணர்தலும், அவற்றுள் நன்றல்லாததை மறப்பதும்,

அறிவு.

‘மறப்பினும் ஒத்துக் கொளலாகும் . - 134 இதிலும், மறப்பதும், பின் அதை ஒதிக் கொள்வதும் அறிவு.

“மறந்தும் பிறன்கேடு சூழற்க’ - 204 இங்கும், சூழ்தலைச் செய்வதும் செய்யாது மறப்பதும் அறிவு.

‘மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம்’ - 263 இதினும் தவத்தை மறப்பது அறிவு

“மறத்தல் வெகுளியை யார்மாட்டும்’ - 303 - இங்கும் வெகுளியைச் செய்வதும், அதை மறப்பதும், அறிவு.

‘அறுதொழிலோர் நூல் மறப்பர்’ - - 560

- இங்கும், நூல் மறத்தலைச் செய்வது அறிவு.

“ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதென் நெஞ்சு’ - 1284

- இங்கு, ஊடலைத் தூண்டியது அறிவு; அதைமறந்து கூடலைத் தூண்டியது மனம், அதற்குத்துணை நின்று மனத்தை வலுப்படுத்தியது, உடல் மனம், அறிவு, உடல் இம் மூன்று உணர்வினும் அமைந்ததே செயல், இவற்றுள் எவையேனும் இரண்டு சேர்ந்து, மூன்றாவதுணர்வைத் தள்ளிச் செயல் நிகழ்த்தும் இன்னோர் உண்மை

‘உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் - ஒள்ளமர்க் கண்ணாள் குணம்’ - 1 125 - இங்கு, மறக்க முயன்றது ωεπώ, ஆனால் அவள் குணத்தை

எண்ணுதலால் மறக்கச் செய்யாது நினைக்கச் செய்தது, அறிவு. - சங்கு எடுத்துக் காட்டிய உணர்வுகளினின்று. அறிவுணர்வே மனத்தை

நினைக்கச் செய்வதும், அது தேவையில்லாத விடத்து மறக்கச் செய்வதும் ஆகும் என்பது உறுதிப்பட்டது. என்க.