பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அ-2-12 பொறையுடைமை 16

பேதைக்கு உரைத்தாலும் தோன்றா துணர்வு’ - பழ:399 பேதைக்கு உரைத்தாலும் செல்லா துணர்வு’ - சிறுபஞ்ச23 - தமிழில் ஒரே பொருள் குறித்த சொற்கள் பலவுள வேனும், அவை தம்முள் சிறுசிறு உணர்வு வேறுபாடுகளும் அறிவு வேறுபாடுகளும் உண்டு. அவை பொதுவான தன்மையுடையவர்தம் பயன்படுத்தத்தில் உணரப்பெறாவாயினும், நூலாசிரியர் போலும் நுண்மாண் நுழைபுலம் (407) மிக்கவர்தம் கூரிய சொற்பயன்படுத்தத்தால் உணரப் பெறும். என்னை?

‘அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்’ r - 7 || | அவராகலின் என்க. அவர் ‘அறிவறிந்தவரும் சொல்லின்

செறிவறிந்தவரும் ஆவர். - மேலும் அவர், விருந்தோம்பல் ஒம்பாதவரை, மடவார் என்னும் சொல்லால் (89) முன்னரே புலப்படுத்தியுள்ளதும் இங்குக் கருதத்தக்கது. அன்ன மடவாரே, இங்கும் அறிவார்க்குத் தீங்கு செய்பவராகவும் குறிக்கப்பெற்றுள்ளார் என்க. அவரே அறிவும் பண்பும் அற்றவர் ஆகலான்.

இச்சொல் இந்நூலுள் இவ்விரண்டே இடங்களில் மட்டுந்தான்

பயன்படுத்தப் பெற்றுள்ளதையும் கருதுதல் வேண்டும். - மேலும் இங்கு வன்மை என்னும் சொல்லும் வெறும் உடல் வல்லமையை மட்டும் குறிப்பதற்குப் பயன்படுத்தப் பெறவில்லை. மனவலிமையையும், அறிவு வலிமையையும் சேர்த்தே இச்சொல்லால் குறிப்பிடப்பெறுகிறது. ஏனெனில், பேதைமையால் ஒருவன் கூறும் சொற்களை ஒருவர் பொறுத்துக் கொள்ளவேண்டுமாயின், அவர் அவன் கூறும் தடிப்பமான சொற்களை முதலில் அறிவான் உட்கொண்டு, அதை அவன் அச்சொற்களின் பொருள் அறியாமல் பயன்படுத்துகிறான் என்பதையும், பின்பு மனத்தால் அச்சொற்களின் பொருள் உணர்வுகளைச் செரித்து, அதன்வழி, அவன் இழிவு, சிறப்பு இடம் தகுதி முதலியவற்றை உணராமல் கூறுகிறான் என்றும் உணர்ந்து கொண்டு, அதன் பின் தன்னுடைய மானவுணர்வால் வெகுண்டெழும் உடலின் எழுச்சியை அடக்கிக்கொண்டு, பொறுமை மேற்கொள்ளல் வேண்டும். இவ் வனைத்து உணர்வு நிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக