பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

229


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 229 நீங்காமை வேண்டின் தம்மை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், - நீங்காமை விரும்புதல், நீங்கினால் ஏற்படும் இழுக்கும் தாழ்வும்

அறிந்திருத்தலால், - எனவே அக்கருத்து வருவித்து உரைக்கப்பெற்றது. - நிறையுடைமை நீங்குதல், பொறையுடைமை போற்றி ஒழுகா விடில் என்க. அஃதாவது, பொறையுடைமை நீங்கிய பின்னர் நிகழ்வது. 2. பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் - அவரிடம் உள்ள பொறுத்துக் கொள்ளும் உணர்வைக் கைவிட்டுவிடாமல் மதித்துத் தொடர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும். பொறையுடைமை - பொறுத்துக் கொள்ளும் உணர்வு தன்மை. போற்றி ஒழுகப்படும் - மதித்துத் தொடர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும். போற்றுதல் - மதித்துப் பேணுதல். w ஒழுகுதல் - தொடர்ந்து கடைப்பிடித்தல். “பொறுத்தல் தன்மை மதிக்கப்பெற்றுத் தொடர்ந்து கடைப்பிடிக்கப் பெற்றால்தான், நிறையுடைமை நீங்காமல் நிற்கும் என்பது கருத்து, என்னை? - - பேதையரும், அறிவிலாதவரும் கூறுகின்ற அல்லது செய்கின்ற தீமையைப் பொறுத்துக் கொள்ளும் பொறையுடைமையை ஒருவர் போற்றிக் காத்துக் கடைப்பிடிக்கவில்லையெனில், அவர்க்குள்ள நிறைகுணநலன்களும் ஒழுக்கங்களும் நீங்கும் என்பது எவ்வாறெனில், கூறுதும். - . - ஒருவர், பொறையுடைமையைப் போற்றி யொழுகாவிடில், பேதையர் கூறும் அல்லது செய்யும், கொடுஞ் சொற்கள் அல்லது தீமையான செயல்கள், இவர் உள்ள உணர்விலும், அறிவுணர்விலும், உடல் உணர்விலும் கிளர்ச்சியையும் எழுச்சியையும் உண்டாக்கும். அக்கால், இவர்க்குச் சினம் தோன்றும் அஃதொரு நிறையிழப்பு சினம் தோன்றவே அடங்காமை தோன் அஃதோர் அற்க்கேடு அடங்காமை தோன்றிவே நடுவு நில்ைமை அகலும் அஃதொரு நிறையிழப்பு. நடுவு நிலைமை அகலவே - இன்னாச்சொல்’ கூறவேண்டியிருக்கும் அஃதோர் அறக்கேடு நிறையிழப்பு இன்னாச்சொல் கூறிய பின்னும் எழுச்சியுணர்வு அடங்காமல், இன்னா

செய்ய வேண்டியிருக்கும். இது so folk

இன்னா செய்தல் பின்பு தீவினையாக வளரும் இஃதொரு நிறையிழப்பு அத்தீவினையின் எதிர்த்தாக்கத்திலிருந்து, தம்மைக் காத்துக் கொள்ள