பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

231


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 231 சில விளக்கக் குறிப்புகள் :

1. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே ஒன்றுமறியாப் பேதையர் கூறுகின்ற கடுஞ்சொற்களையும், செய்யும் தீமைகளையும் பொறுத்துக் கொள்ளாமல், வெகுண்டெழுந்து அவர்களைத் தண்டித்தவர்களை உலகத்தார் ஒரு பொருட்டாக மதியார். ஒறுத்தாரை - தண்டித்தவர்களை. - - தண்டிப்பதற்குரிய காரணங்களும், தண்டிக்கப்படுபவர்களும் வருவித்துக்

கூறப்பெற்றன. ஒன்றாக - ஒரு பொருட்டாக, வையார் - மதியார். . உலகத்தார் என்பது வருவிக்கப்பட்டது. - வைத்தல் - மதித்துப் போற்றுதல். - ஏகாரம் தேற்றம் உறுதிப்பொருள் தந்தது. 2. பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து - ஆனால் அவர்களின் அறியாமையை எண்ணி அவற்றைப் பொறுத்துக்கொண்டவர்களை உலகத்தார் தம் உள்ளத்தில் வைத்துப் பெருமை நினைந்து, போற்றிப் புகழ்ந்துகொண்டிருப்பர். பொறுத்தாரை - அத் தீமைகள் செய்தவர்களுக்குத் திருப்பித் தீமைகள் செய்யாமலோ, அவர்களைத் தண்டியாமலோ பொறுத்துக் கொண்டவர்களை. பொன்போல் பொதிந்து - பொன்னைப் பேழைக்குள் இட்டுக் காத்து வைப்பதைப் போல். ‘பொன்’ என்றும் எவ்விடத்தும் மதிக்கப் பெறுவதால், அதைப் போல் என்றார். - வைப்பர் - உலகத்தவர் நினைந்து மதித்துப் போற்றிப் புகழ்ந்து

கொண்டிருப்பர். உள்ளத்தில் வைத்துக் காத்து. பொதிதல் - தன்னுள் அடக்கி வைத்துப் பேணுதல்.

பொன் பொதிந்தன்ன . . . . . 8 : 26 : . ஆர்கலி வானம் நீர்பொதிந்து இயங்க’ - நற் 364 : 3, மேகம் நீரைத் தன்னுள் அடக்கி வைத்து : ; : : o, . . . ;

மாளிப்பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து

‘மழைக் காலத்து மலர்ந்த பிச்சிப் பூ மொட்டுகள்ை

குறுந் 1681

தெளித்து