பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 அ-2-12 பொறையுடைமை 16

சென்று, இரக்கத்துடனும் அன்புடனும் கனிவுடனும் அவள் படுக்கையை நெருங்கி, அவளை நோக்கி, நலம் கேட்டு, அவள் நிலைக்கு வருந்தியதும், அவள் அவரின் உயர்ந்த தன்மைக்கு நெகிழ்ந்து, மனந்திருந்தி, தான் அவர்க்கிழைத்த பிழைக்கு வருந்தி, நபிகள் நாயகத்திடம் தன்னைப் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டதும், அவ்வாறே அவர் அம் முதுமகளைக் குற்றம் கூறாது தேற்றி, அவள் நோய்நீங்க, இறைவனை இறைஞ்சித் தொழுததும்; பின்னொருகால், அப் பெருமகனார், அரபு நாட்டின் அரசராய் இருந்தபொழுது, ஒருமுறை, போரில் சிறைப்பிடித்து வரப்பெற்ற நூற்றுக்கணக்கான எதிரிப்படை வீரர்களைத் தங்கட்கு அடிமைகளாக வைத்துக்கொள்ள, நபி பெருமகனாரிடம், அவர் தம் படைவீரர்கள் கேட்க, அவர்களுக்கு அமைவு கூறி, அவர்கள் அனைவரையும் மன்னித்து, விடுதலை செய்யச் சொன்னதும், அந்நிகழ்ச்சியை அவர் அருகிருந்து பார்த்த அவரின் அருமை மகள் பாத்திமா அவர்கள், அப் படைவீரர்களுள் ஒருவரைத் தம் இல்லத்திற்குப் பணிசெய்ய அனுப்பித்தரும்படி கேட்டபொழுதும், பெருமகனார், அதை மறுத்துத் தம் அன்பு மகளிடம் அப்பணிகளைத் தாமே செய்துகொள்ளும்படி அமைவு செய்து பணித்ததும்; - - ஆகிய நிகழ்ச்சிகள், வரலாற்றில் இன்றுகாறும் நின்று பொலிவதையும்

இக்குறளொடு பொருத்தியுணர்ந்து மகிழ்க - இவற்றுடன், இங்குக் கருதத்தக்க இன்னொரு வரலாற்று நிகழ்வும் காண்க - ஒருதாளைக்கு ஒருமுறை ஒருவீட்டிலேயே சென்று உணவு கேட்டுக் கிடைத்தால் உண்டும், கிடைக்காவிட்டால் உண்ணாமலும் நோன்பு கடைப்பிடித்து வந்த கெளதம புத்தர், ஒருநாள், ஒருவீட்டின் முன் உணவு கேட்டு நிற்க, சிறிது நேரத்தில் அவ்வீட்டுக்காரன் வெளியே வந்து, இவரை ஏறஇறங்கப் பார்த்து, இவர் உடல் தோற்றத்தையும், துறவுக் கோலத்தையும் கண்டு இகழ்ந்து, உறுப்புகள் குறைவில்லாத உடலை வைத்துக்கொண்டு, எங்கேனும் சென்று, உழைத்துப் பிழைக்காமல், இரந்துண்ண வந்து விட்டாயே, உனக்கு வெட்கமாயில்லையா என்று கேட்டு இகழ்ந்தும், வேறு பலவாறு சுடுசொற்களால் இழிவாகவும் நெடுநேரம் ஏசிக் கொண்டிருக்க, அவற்றையெல்லாம் அமைதியுடனும், புன்னகை தவழும் முகத்துடனும் கேட்டுக் கொண்டிருந்த புத்தர் பெருமான், அவன் ஏசிமுடித்து ஓய்ந்ததும், அப்பா, நீ எனக்கு ஏதாவது உணவு. கொண்டுவந்து கொடுத்தால், தான் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் என்ன செய்வாய்’ என்று கேட்க,