பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

235


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 235

நான் உனக்கு எந்த உணவும் தரமாட்டேன்; அவ்வாறு கொடுத்தாலும், நீ அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால், திருப்பி நானே எடுத்துக் கொண்டு போவேன்’ என்று எள்ளலாய்க் கூற, அப்படியானால், நீ இதுவரை கொட்டிய சொற்களை நான் எடுத்துக் கொள்ளவில்லை; அவற்றை நீயே வைத்துக் கொள்’ என்று அமைதியாய்க் கூறித் திரும்பி, அன்று தன் கடமை முடிந்துவிட்டதால் வேறுவிடு போய் இரவாமல், பட்டினியாய் இருந்த அப்பெருமகனாரின் தகைமையறிந்து தான் உலகம் இன்றளவும் அவரைப் போற்றுதல் செய்வதும், இவ்விடம் கருதி உணரத்தக்கது. 3. இது, முன்னைய குறளில் கூறப்பெற்ற, பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து வைப்பர் என்னும் கருத்துக்கு மேல் விளக்கமாக அமைந்ததால், அதன் பின்னர் வைக்கப்பெற்றது.

கருள். திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறனல்ல செய்யாமை நன்று. - 157

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை: தான்தாங்கிக் கொள்ளும் திறன் அல்லாத தீமைகளைத் தனக்குப் பிறர் செய்யினும், அதன் பொருட்டு அவர்க்கு வரவிருக்கும் துன்பத்திற்காக மனம் வருந்தி, அவர்க்குத் தான் மேலும் அறமல்லாதவற்றைச் செய்யாமலிருப்பது நல்லது. - -

சில விளக்கக் குறிப்புகள் : . . .

1. திறனல்ல தன்பிறர் செய்யினும் - தான்தாங்கிக் கொள்ளும் திறன் அல்லாத .தீமைகளைத் தனக்குப் பிறர் செய்யினும் . : . . . .” - திறன் அல்ல - தான் தாங்கிக் கொள்ளும் திறன் அல்லாத தீமைகள். பொறுத்துக் கொள்ள இயலாத நிலையில் செய்யப்படுவ்தால் தீமைகள்

என்னும் சொல் வருவிக்கப்பெற்றது. ‘’ ‘ ‘ ‘ ..’ : ’, தன்பிறர் - தனக்குப்பிறர். - செய்யினும் - செய்தாலும்

- இங்கு, திறனல்ல. என்பதற்கு உரையாசிரியர் அனைவரும், செய்யத்தகாதவற்றை (பரிமேலழகர்) தகுதியில்லாதவற்றை : (மணக்குடவர் புகழல்லாத காரியத்தை (பரிதியார்) செய்யத் தகாத