பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

237


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 237

தண்டனைக்காக வருந்தப்போகும் உறுதியால், அதற்காகத் தான் உளம் வருந்தி என்றலே உலகியலுக்கும், அறவியலுக்கும் மிகப் பொருந்துவதாம் என்க.

3. அறனல்ல செய்யாமை நன்று - அவர்க்குத் தான் மேலும்

அறமல்லாதவற்றைச் செய்யாமலிருப்பது நல்லது. அறனல்ல - அறச்செயல் அல்லாதன. அவை, அவனைப் போலவே இழித்தல், பழித்தல் முதலிய இன்னா கூறுதல், அவனைப் பற்றிப் பிறரிடம் புறங்கூறுதல், அவனுக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தீமை செய்தல், அவனுக்குப் பிறர் செய்ய விரும்பும் நலன்களைத் தடுத்தல், அவன் வாழ்க்கைக்கு இடையூறு செய்தல், அவன் குடும்பத்தார்க்குத் துயர் விளைவித்தல் முதலிய செயல்கள். செய்யாமை - இவற்றைச் செய்யாதிருத்தல். நன்று - நல்லது. - இவற்றைச் செய்யுங்கால், மேலும் பகை வளர்ந்து, அவனும் தொடர்ந்து துயர்தந்து கொண்டிருக்கவே செய்வானல்லது அடங்கி நில்லான். அந்நிலை நமக்கு மேலும் மேலும் துயரையும் “தீங்கையும் தந்து கொண்டேயிருக்குமாகையால் அவற்றைத் தவிர்க்கக் கூறினார் என்க. 4. இது, உலகம் புகழ்தல் மட்டுமன்று. தமக்கும் உலகியலில் நன்மையே விளையும் என்றலால் முன்னதன் பின்னர் இது வைக்கப்பெற்றது.

கருஅ. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல். - 158

பொருள் கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை தமக்குற்ற உடல்வலிமை, மனவலிமை, ஆள்வலிமை, செல்வ வலிமை, சாய்கால் வலிமை, அதிகார வலிமை முதலியவற்றின் மிகுதிப்பாட்டால், இயல்பின் மிக்க தீமைகளைச் செய்தவர்களைத் தாமும் அங்ஙனே செய்து தோல்வியுறாமல், தம் பொறையுடைமையால் அமைந்திருந்து வெற்றிகொள்வதே தக்கது. -

சில விளக்கக் குறிப்புகள் :

1. மிகுதியான் மிக்கவை செய்தாரை - தமக்குற்ற உடல்வலிமை, மனவலிமை, ஆள்வலிமை, செல்வ வலிமை, சாய்கால் வலிமை, அதிகார வலிமை