பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

241


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 241

- மொழித்துய்மை - மனம் தூய்மையுறுவதால், மொழியும் தூய்மையுறும்

என்றவாறு. - இறந்தார் வாய் இன்னாச்சொல் போல் தானும் மொழியாது நிற்றலால்

மொழித்துய்மையும் பெற்றார் என்க. என்னை?

‘மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை’ - 295 என்பார் ஆகலின், இனி, அதன்மேலும்,

‘உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் - 160 என்றும் அடுத்து மொழிவார். - மெய்த்துய்மை - இனி, இல்லறத்தாரின் உடம்பு, துறவறத்தாரின் உடம்பைவிடத் துய்மை பெற்றது. எவ்வாறெனில், துறவியர் உடம்பு அவரின் நன்மைக்கு மட்டுமே உழைப்பது. இல்லறத்தாரின் உடம்பு பலருடைய நன்மைக் கெனவும் உழைப்பது. இல்லறத்துள்ளார் அனைவர்க்கும் உணவு தரும் கொள்கையான், அங்குள்ளார் அனைவரும் பிறர்க்கென உடல் உழைப்புத் தரவேண்டியுள்ளது. பொது நலம் கருதுதலின் தனிநலம் கருதும் உடலைவிட, அது துய்மைப் பயன் கொண்டது என்க. என்னை?

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.’ - 225

- என்பாராகலின். - எனவே, துறந்தாரினும், இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவரின்

தூய்மை புலப்படுத்தப்பெற்றது என்க. - இவ்விடத்துப் பரிதியார் கூறும் ஒரு கருத்து நினைதற்குரியது. அது, துறந்தார் பெரியோரானாலும் தவத்தின் பெருமையினாலே ஒருவரைச் சாபமிடுவர்; இவன் இல்லறத்திலே இருந்தும், தனக்கு ஒருவர்.செய்த குற்றம் பொறுப்பவன் ஆதலின் பெரியவன் என்றவாறு. 3. இஃது, அதிகார்க் கருத்தை முடித்துக்கூறும் தன்மையில், துறவியரைவிட இல்லறத்தார் இன்னாச்சொல் நோற்பதால் பெருமையுடையவர் என்னும் முதற்கருத்தைக் கூறியதாயிற்று.