பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 அ-2-13 அழுக்காறாமை 17

பொறாமை வேறு. பொறுத்துக் கொள்ளாமை தன்னளவில் நிகழ்வது. பொறாமை பிறர் அளவில் நிகழ்வது. இங்கு ‘அழுக்காறு குறிக்கப்பெறுவது பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளாமல் மன எரிச்சல் கொள்ளும் பொறாமை உணர்வையே.

அழுக்கு - மாக, கசடு ‘புலனழுக்கற்ற அறிவின்கண் மாசு அற்ற - புறம் : 126 - 11 பொதுவான மாசைக் குறிக்கும் அழுக்கு என்னும் சொல் இங்கு ‘மன மாசை மன அழுக்கைக் குறித்தது.

உடலில் சேரும் அழுக்குப் போல் மனத்தில் சேரும் அழுக்கு - மாசு எனும் சொல்லால் குறிக்கப்பெறுகிறது.

‘மனத்துக்கண் மாசு’ ~ 34 ‘மருள்தீர்ந்த மாசறு காட்சி - 199, 352 (மருள் மன மயக்கம்) -

மனத்தது மாசுஆக . - 278 ‘மாக அற்றார் கேண்மை’ - 106, 800 ‘மாசு அற்றார் கோள்’ - 3 11, 392, 646 ‘மன மாக - மணி. 9-59, 12-35, 21:49, 22-96

‘மல்லல் உள்ளமொடு மாகஅற விளங்கிய” - பதிற்று-பத். 7-11

‘அழுக்கறு என்பது மன அழுக்கை, மன மாசை அகற்று என்று பொருள் தந்தது. -

I. மனத்தில் சேரும் முதல் அழுக்கு மாசு , பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளாமையே ஆகும் பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படுவதாவது, அவர்தம் கல்வி, செல்வம், அதிகாரம், மதிப்பு முதலியவற்றைக் கண்டு பொறுத்துக் கொள்ளாமை, பொறாமைப்படுதல் - இது மனத்துள் நிகழ்வது.

2. மனத்தின் இரண்டாவது மாசு - அழுக்கு அவ்வாறு ஒருவரின் ஆக்கம் கண்டு பொறாமைப்பட்ட பின், அவரது ஆக்கத்தைப் போல் தானும் பெற விரும்புதல் வெஃகுதல் அவாவுதல், இதுவும் மனத்துள்ளே

ஆக, இவை இரண்டும் மனத்துவழிக் குற்றங்கள்.