பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

251


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 251

- அழுக்காற்றின் அன்மை பெறின் - பொறாமை அல்லாத மனவுணர்வை

ஒருவன் பெற்றால், அழுக்காற்றின் அன்மை - பொறாமை அல்லாத தன்மை,

2. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை - பெருமை மிக்க பெறுமதிகளுள்,

அதைப்போல் சிறந்தது வேறு இல்லை. . - விழுப்பேற்றின் - விழுமை மிக்க டேறுகளுள் பெறுமதிகளுள்,

மாந்தன்தன் வாழ்நாளில் பெறத்தக்க பேறுகள் பலவுள. அவை, புகழ், உடல்நலம், அழகு, இளமை, நோயின்மை, வாழ்நாள், நல்லூழ், கல்வி, அறிவு, துணிவு, வலிமை, வெற்றி, நுகர்ச்சி, நன்மக்கள், நெல், பொன் எனும் பதினாறு என்ப. இவைதவிர பொறாமையின்மை ஒரு பெருமைக்குரிய பேறு என்பார், ஆசிரியர் என்னை? - பொறாமை யிருந்தால் முன்கூறப் பெற்ற பேறுகள் சிறப்பிழக்கும்; எனவே பொறாமையின்மை பெருமைக்குரிய பேறு விழுப் பேறு என்றார்.

- பொறாமையின்றி யிருந்தால்தான் ஒருவர் பெறுகின்ற மற்ற டேறுகளைப் பிறர் மதிப்பர். இல்லெனின் மதியார் என்பது மட்டுமன்று வெறுக்கவும் செய்வார் - என்பதாம். எனவே பிறவற்றிற்குப் பெருமைதரும் பேறு இதுவென்றார், என்க. - இனி, இதைத் தவிர வேறு பேறு இல்லை என்றும் சிறப்பித்தார். 3. இது, முன்னைய கருத்துக்கு மேலும் விளக்கம் கூறுவதாகையால்,

அதன் பின்னர், வைக்கப்பெற்றது. .

கசுங், அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்

பேணாது அழுக்கறுப் பான். - #63 பொருள்கோள் முறை :

பிறன்ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான், அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான்.

பொழிப்புரை : பிறனுடைய ஆக்கங்களை, அவனது முயற்சியாலும் உழைப்பாலும் வந்தவை என்று போற்றிக் கொள்ளாமல் பொறாமை

கொள்பவன், தன்னுடைய அறமுயற்சிகளால் வ ஆக்கங்களை விரும்பாதவனே ஆவான்.