பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

257


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 257

‘முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் (616) என்றாராகலின். - இந்நிலை பொறாமை கொள்ளும் ஓர் உணர்வினால் மட்டும் விளைவதன்று. அதனையடுத்தடுத்து வரும் அறக்கேடுகளால் என்க. (அதிகார முன்னுரை பார்க்க)

‘எடுத்துஒருவ ருக்குஒருவர் ஈவதனின் முன்னே தடுப்பது நினக்குஇதுஅழ கோ, தகைவில் வெள்ளி கொடுப்பது விலக்குகொடி யோய், நினது சுற்றம் உடுப்பதும் உண்பதுவும் இன்றிவிடு கின்றாய்’ - எனும் கம்ப இராமாயணப் பாடலை எடுத்துக் காட்டுவர்

விளக்கவுரையாசிரியர் கோ. வடிவேலனார்.

3. இது, முன்னைய குறளின் கேடு என்பதற்கு, விளக்கமாகலின், அதன்பின்

வைக்கப்பெற்றது.

கசு.எ. அவ்வித்து) அழுக்காறு) உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும். - 167

பொருள்கோள் முறை :

அழுக்காறு உடையானைச் செய்யவள் அவ்வித்துத் தவ்வையை காட்டி விடும்.

பொழிப்புரை : பொறாமை உடையவனைச் செய்யவள் திருமகள்) மனத்தைச்

பெயர்ந்து விடும்.

சில விளக்கக் குறிப்புகள் : !...” . “ ..

1. இக் குறளில், நூலாசிரியர், அவர் காலத்து வழங்கியிருக்கின்ற இரண்டு

உருவகப் பெயர்களைப் பயன்படுத்திப் பொறாமை உடையவன், செல்வ நிலையை முன்னரே பெற்றிருந்தாலும், நாளடைவில் சோம்பலுற்றுச் செயல்திறம் குன்றி, ஏழைமையை எய்தி விடுவான் என்னும் கருத்தைக் கூறுகிறார். --

2. இதில் பயன்படுத்தப் பெறும் இரண்டு உருவகச் சொற்கள் செய்யவள்,

தவ்வை என்பனவாம்.