பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

259


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 259

- ஆக, இவ் வேழு சொற்களும் ஆசிரியர் பயன்படுத்திய அல்லது

உருவாக்கிய சொற்களாகவே கருதவேண்டி உள்ளது.

- செய்யவளுக்குப் பொதுவாக வழங்கும் திருமகள் எனும் சொல்லுங்கூட, கழகக் காலத்திற்குப் பிந்திய சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களுள்ளும், அவற்றுக்குப் பிந்திய மதவியல் சார்ந்த நூல்களுள் மட்டுமே பயிலப்பெறுகிறது.

- இவற்றின்வழி, அறியப் பெறுவது என்னெனில், ‘ஆரியவியல் சார்பான கருத்துகளைத் தமிழ்மக்கள் தொடக்கக் காலத்து ஏற்காமல் புறக்கணித்துப் பின்பு அரசுநிலை அழுத்தங்களாலும், குமுகநிலை நெகிழ்ச்சியாலும், மதநிலையின் தொடர்ந்த கருத்துப் பரப்புதலாலுமே, காலப்போக்கில் படிப்படியாய் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்பது புலப்படுகிறது, என்க.

3. அழுக்காறு உடையானைச் செய்யவள் அவ்வித்து - பொறாமை உணர்வு உடையவனைச் செய்யவள் (திருமகள், செல்வ மகள்) மனத்தைச் சுருக்கிக் கொண்டு.

அவ்வித்து - மனத்தைச் சுருக்கிக் கொண்டு இச்சொல்லுக்கு உரையாசிரியர்கள், பொறாது (பரிமேலழகர்), அழுக்காறு செய்து (மணக்குடவர்), பொறாது (பாவாணர்) - என்று பலவாறு பொருள் தருகின்றனர்:

- இதற்கு மூலச் சொல்லாகிய ‘அவ்’ என்னும் சொல்லுக்குச் சுருங்குதல்,

குறுகுதல், இறுகுதல் என்னும் பொருள்கள் உண்டு. - செய்யவளாகிய செல்வ மகள் ஏதோ ஒருவகையில் முன் இவனொடு நின்றவள், அவனது பொறாமை உள்ளத்தைக் கண்டு, மனத்தைச் சுருக்கிக்கொண்டு இவனை விட்டு நீங்குவது குறித்தது. மனத்தைச் சுருக்குதல் பரந்த உளத்தொடு அன்பும் இரக்கமும் உடையளாயிருந்தவள், அவ்வுணர்வுகளைச் சுருக்கிக் கொள்ளுதல். தவ்வையைக் காட்டி விடும் தன் அக்கையாகிய வறுமை மகளு (மூதேவி)க்கு நீ இவனைச் சென்றடை என்று அடையாளம் காட்டிவிடும் என்றவாறு, : - - - அவ்வை பெரியவள் மூத்தவள் - அக்கை

தம் + அவ்வை - தவ்வை. உம் அவ்வை . உவ்வை. எம் + அவ்வை . எவ்வை. தும் + அவ்வை - துவ்வை.