பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

263


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 263

விளையும் நலக்கூறுகளும் வளக்கூறுகளும் என்று அகலக் கூறவேண்டுவதாயிற்று.

. நலக்கூறுகள் - உடல்நலம், உண்ணல், உடுத்தல், உறைதல் முதலிய

நன்மைக் கூறுகள்.

- வளக்கூறுகள் மேலும் மேலும் வருவாய் பெருகுவதற்குரிய நிலபுலங்கள், எய்ப்பில் வைப்புகள், போக்குவரத்து வாய்ப்புகள், ஏவல்கள், எடுபிடிகள், காவல் கட்டுகள் அரசப் பதவிகளும் அவற்றால் வரும் சலுகைகளும் தாராளங்களும் முதலியன.

- குறுகிய நெஞ்சத்தானுக்குச் சிற்சிலகால் இவ் வாய்ப்பு வசதிகள் சேர்வதும், பெருகுவதும் உலகியலின் பெரும்பான்மையாக இருக்கிறது.

குறுகிய நெஞ்சத்தவன் என்பவன், பொறாமை, ஒழுங்கின்மை, நேர்மையின்மை தீயவை நினைதல் செய்தல் தன்மைகள் உடையவனும், குடியன், கூத்தன், கூத்தியன், களவன், கடத்தன், கட்குடி வணிகன், பெண்டு தரகன், பெருங்கடற் கொள்ளையன், முதலாயினோரும்.

- இத் தகாத் தன்மையுடையவனெல்லாம் ஆக்கங்கள் சேரப் பெறுதலும் அவை கூரப்பெறுதலும், முன்வினைப் பயனெனல் முழுமூடர்க்கும் ஒவ்வாது. என்னை?

- முன்வினை நல்வினையாகி, இப்பிறப்பில் இவ்வாறு நலமும் வளமும் சேருமெனின், அவ்வினைப் பயன் ஏன் அவனை இழிஞனாகச் செய்தல் அல்லது இயக்குதல் வேண்டும் என்னும் வினாவிற்கு விடையின்மை காண்க. : ---

- அஃதவ்வாறாதல், அவனின் இப்பிறப்பைச்சார்ந்த வினைகள் என்பதும், அவற்றிற்கு அடுத்துவரும் பிறவியில் பயன் சாரும் என்பதும் விடையாமெனில்,

முன்னைப் பிறவியின் வினைப்பயன் செல்வத்தை மட்டுத்தான் சாருமோ, மனத்தையும் அறிவையும் சாராதோ எனும் வினாவிற்கு விடை முட்டுப்பாடு நேரும் என்க. இனி, முற்பிறவியின் வினைவிளைவுகளின் எல்லை முடிவு எவ்விடத்தென்பதற்கும், இப்பிறவியின் வினைத்தொடக்கம் எதுவென்பதற்கும் விடைகூறுதல் இயலாதென்க.

3. செவ்வியான் கேடும் நேர்மையுடையவனின் கேடுகளும்,

. செவ்விது - நேரிது. ஒழுங்குடையது.

கேடும் GG