பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

265


திருக்குறள்-மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 265

நடைமுறைகளால் நேர்ந்த வரவுத் தவறுதல்களாலும் நேர்ந்தவை

இத்துன்பங்களும் கேடுகளும் என்பதும், அவரவர் எண்ணிப் பார்ப்பின் அவர்களுக்கே புலப்படும் என்றவாறு -

என்க. -

- இனி, இவ்விருவகைக் கூறுகளையும் மேலும் நன்கு விளங்கிக்

கொள்ளுதல் சாலவும் நன்று.

- அவ்விய நெஞ்சத்தான் குறுகிய உளத்தவன்; பொறாமை நெஞ்சினன் ஆகலின், அவன் முயற்சிகள் அனைத்தும் எந்த வழி நோக்கியும் அமையும் என்க. அவனிடம் ஒழுங்குணர்வு இராது; நேர்மை இராது; உண்மையிராது; பொருளை எவ்வாறேனும், எது செய்தேனும் ஈட்டுதல் வேண்டும் என்னும் தணியா ஆசை கொண்டு பலவழியானும் செல்வம் சேர்ப்பான்,

எனவே அவன்பால் ஆக்கங்கள் வந்து குவியும். இவை யெல்லாம்

சேர்வதற்கும், அவன் முற்பிறவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவன் முற்பிறவியின் நல்வினைப் பயனால் இவை நேர்வதெனில், அந்நல் வினைப் பயனால் அவன் அறநெஞ்சினனாகவும் அறிவோனாகவுமன்றோ பிறந்திருத்தல் வேண்டும். நன்மனத்தையும், நல்லறிவையும் தராதது எவ்வாறு நல்வினைப் பயனாக இருத்தல் இயலும்? நல்வினைப் பயன் செல்வத்தை மட்டும் ஆக்கத்தை மட்டுந்தான் தருமோ? ஏன் அஃது அறிவைத் தராது? அறவுணர்வைத் தராது ? நல்வினைப் பயன் நல்லியல்புகளையும் நல் விளைவுகளையுமன்றோ தருதல் வேண்டும். அவனுக்கு அவ்வியல்புகளும் அவ்விய நெஞ்சமும் வாயாததற்கு வேறு வினையும், ஆக்கம் சேர்வதற்கு வேறு வினையும் உண்டோ? இனி, அதுபோலவே செவ்வியான் நேர்மையுள்ளவனாகவும், ஒழுங்குணர்வு உள்ளவனாகவும், உண்மையினனாகவும், அறமல்லாத வழிகளில் பொருள் சேர்க்கும் எண்ணம் கெர்ளளாதவனாகவும் இருத்தல் இயல்பானதன்றோ?

‘படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யான் - 172 “பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிதல் குரவே தலை’ - - 657

என்றிருப்பான். மேலும், நூலாசிரியரே அச் செவ்வியான் தன்மைகளைக் கூறும் பொழுது, அவன் ஏழைமைப் பட்டாலும் படுவனே யல்லாது, பொருள் சேர்க்கும் பொருட்டு அல்லன செய்து ஒழுகான் என்று பலவிடத்தும் பலவாறும் கூறுவது காண்க