பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

267


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 267 “சீரியர் கெட்டாலும் சீரியர் சீரியரே! - வாக்கு : 18 ‘ஒற்கத்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர் நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால் தன்மேல் நலியும் பசிபெரி தாயினும்

புன்மேயா. தாகும் புலி’ - பழ : 118 ‘தனம்சிறிய ராயினும் தார்வேந்தர் கேட்டால் மனம்சிறிய ராவரோ மற்று’ - வாக்கு : 28

- என்றார் பிறரும்.

எனவே, எத்துணையளவு ஏழைமைப்படினும், செவ்வியர் தம் நிலையினின்று தாழ்ந்து பொருள் தேடித் தமக்குற்ற நிலையைச் சரிசெய்து கொள்ள முற்படாமையாலும், அவர்களின் பிற அறவாக்க - அறிவாக்க முயற்சிகளினின்று பெயரார் ஆகையினாலும், அவர்கள் தமக்கு வரும் கேடுகளினின்று மீள முடியாதவர்களாகவே இருப்பர். இவ்வகையில், செவ்வியார்க்குக் கேடு வருதல் பழவினை என்று ஆராய்ந்து

காணப்படும் என்று பரிமேலழகர் கூறி,

‘இம்மைச் செய்தன யான்அறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது’ - என்று, கோவலனை நோக்கி மாடலன் கூறும் கூற்றை (சிலப். அடைக்கலக்.91-93) எடுத்துக்காட்டாகக் கூறுவர். - பாவணரோ, அதே பாட்டடிகளையும் கூறி, அதன்மேற் சென்று, - என்செயலால் ஆவது யாதொன்று மில்லை இனித்தெய்வமே

உன்செயல் தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே என்னும் பட்டினத்தடிகளின் பாட்டையும் எடுத்துக்காட்டி, அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் ஆகிய இருநிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பதால், அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும்’ என்றார். - இவர்கள் இருவரும் ஆராய்ச்சி என்றது. ‘நினைக்கப்படும் என்னும் “சொல்லையே. ஆராய்ச்சி அல்லது ஆராயப்படும் என்பதற்கு ‘நினைக்கப்படும் எனும் சொல்லைப் பயன்படுத்துபவரல்லர் நூலாசிரியர். -