பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

269


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 269

- அவ்வகையில் அத்தகைய நல்லவனுக்கு - செவ்வியனுக்கு - நன்மை நடந்தால், அஃது இறைவனின் உதவி என்று பெருமிதப்படுவதும், தீமைகள் - கொடுமைகள் - துன்பங்கள் நடந்தால், அவை அவன் தலை விதி முன் செய்த தீவினைப் பயன் என்பதாகக் கூறி மழுப்புவதாகவும் உள்ளது. (நன்மை நடந்தால் நல்வினைப் பயன்’ என்று நினைப்பது கொஞ்சமே!)

அதேபோல், தீயவனுக்கு கெட்டவனுக்கு அஃதாவது அவ்விய நெஞ்சத்தவனுக்கு தீமை நடந்தால், அஃது இறைவன் தரும் தண்டனை - என்று மற்றவர் மகிழ்வதும், நன்மைகள், பொருள் நலன்கள் நடந்தால், அவை அவன் முன்செய்த புண்ணியம் - நல்வினைப் பயன் என்பதாகக் கூறிச் சரிகட்டிக் கொள்வதும் (சமாளித்துக் கொள்வதும்) ஆக உள்ளது. (தீமைகளைத் தீவினைப் பயன் என்று, இவ்விடத்து நினைப்பதும் கொஞ்சமே )

- இவ்விரண்டு நடைமுறைகளும் மதவியலை அதுவும் ஆரிய மதமாகிய வேதவியலை, உயர்த்திக் காட்டக் கூறப்பெறும் கற்பனையான கதைப்பு

(கதை நிகழ்ச்சிகளே தவிர உண்மை யல்ல. திட்டமிட்டு எழுதப்

பெற்ற கதைகளில் மட்டும் இவை நிகழ்ந்தனவாகக் கூறப்பெற்றுள்ளனவே தவிர, அவ்வாறு இறை நம்பிக்கை உள்ளவனுக்கோ, அல்லது நன்னெறியில் வாழ்ந்த நல்லவர்களுக்கோ, செவ்வியர்களுக்கோ என்றும் எங்கும் நிகழ்ந்தனவாக வரலாறு இல்லை. (அவ்வாறு எடுத்துக்காட்டுடன் கூறி எவரும் மெய்ப்ப்பித்துவிட முடியாது)

- இறை இறக்கப் பிறவிகள் (அவதாரங்கள்) என்று கூறப்பெறும், மாந்த வாழ்வினர்க்கேகூட, அஃதாவது, இராமனுக்கோ, பாண்டவர் iகோ (அக்கதைகளும் கட்டுக் கதைகளே! இருப்பினும் அவற்றிலும்கூட) அல்லது இயேசுவிற்கோ, முகமது நபி அவர்களுக்கோ கூட, அவ்வாறு நன்மைகள் நடக்கவில்லை என்பது உணரத்தக்கது.

தெய்வ இறக்கம் என்று கூறப்பெறும் இராமன், பதினான்கு ஆண்டுகள் தன் தம்பியொடும் மனைவியொடும் காடேகித் துன்புற்றதும், சீ:ை அங்குச் சிறையெடுக்கப் பெற்றதும், இறுதியில் இருவரும் துன்ப முடில் எய்தியதும், . . . ; . . . . . .

பாண்டவர்களும் நல்லவர்களாக செவ்வியர்களாக இருந்தும், பன்னிராண்டுகள் காடேகித் துன்புற்றதும், பின் ஓராண்டு நாட்டில் கரந்து வாழ்ந்து இடர்கள் பட்டதும், - - தேவதூதன் எனப்பெறும் இயேசுவும் பலவகையானும் துன்புறுத்தப்

பெற்று, இறுதியில் குறுக்கத்தில் அறையப் பெற்றதும், -