பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 அ-2-13 அழுக்காறாமை -17

அதேபோலும், இறைத் துரதராகக் கருதப்பெற்றவராகிய முகமதுவும், மக்காவிலும் மதீனாவிலும் பலவகையான துன்பங்களுக்கு ஆளானதும்,

- ஆழ்ந்து எண்ணத்தக்கன.

எனவே, இவ்வுலகில் தோன்றி மக்கள் நலனுக்கே உழைத்த அறவாணர்களாகிய செவ்வியர்கள், நல்லவர்கள் - அனைவருமே வாழ்க்கை முழுவதும் பல வகையான துன்பங்களுக்கும், கெடுதல்களுக்குமே ஆட்பட்டிருக்கின்றமையே வரலாற்றில் தெரிய வருகிறது. அவர்களின் இந்த நிலைகளுக்கு அவர்தம் முன்பிறவி வினைகளே காரணம் என்று கூறமுடியுமா?

அறவியலுக்கு மக்களிடையில் மதிப்பும் பெருமையும் ஆதரவும் இருக்குமே தவிர, இறையியல் அடிப்படையில் எவ்வகைத் தனிச்சிறப்போ, அரிய ஆற்றல்களோ, இருப்பதில்லை; அதேபோல், இயற்கைக்கு மாறான, அறிவியலுக்குப் பொருந்தாக வியத்தகு நிகழ்வுகளோ நடந்துவிடுவதற் கில்லை. அவ்வாறு கதைகளில் கூறுவதெல்லாம் இறையியலுக்கும், அதனினும் மூட நம்பிக்கைகள் நிறைந்த மதவியலுக்கும் ஏற்றம் தருவதற்கான உத்திகளே தவிர வேறில்லை.

. உலகியல் வேறு உயிரியல் வேறு; அதேபோல்

அறவியல் வேறு அறிவியல் வேறு. அதேபோல்

இறையியல் வேறு, மதவியல் வேறு!

- இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையில் இயைபுகள் உண்டே

தவிர, இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் இல்லை. அறவியலான் . செவ்வியான் - ஓர் இறைப் பற்றாளன் தொட்டால் இரும்பு பொன்னாகாது! - . - - அதேபோல் மறவியலான் - அவ்விய நெஞ்சத்தான் - கெடும்பன்

தொட்டால் பொன் இரும்பாகிவிடாது! - ஓர் அறவியலான், செவ்வியான் ஓர் இறைப் பற்றாளன் வீட்டு

விளக்கு எண்ணெயின்றித் தண்ணிரில் எரியாது! அதேபோல் ஒரு மறவியலான் அவ்விய நெஞ்சத்தான் வீட்டு விளக்கு எண்ணெய் ஊற்றினால் எரியாமல் போகாது. தண்ணிர் ஊற்றினால் அணையாமலும் இருக்காது. அறவியலாளன் அறவுணர்வுடையவன்; அறிவுணர்வுடையவன்; மனவொழுக்கமுடையவன். அதனால் எல்லா விளைவுகளும்