பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 அ-2-13 அழுக்காறாமை 17

அன்று உண்மையும் அன்று! ஆரிய மதத்தின், இந்து மதத்தின் நச்சுவேர் இதுதான்! - இன்னும் சொன்னால், அறவியல், குலமகள் போன்றது. குலமகளுக்கு ஏழைமை, வறுமை,

கெடும்புகள் வரும், வரலாம்! அதற்காக ஒழுக்கம் கெடமாட்டாள். மறவியல் அஃதாவது அவ்விய நெஞ்சங் கொண்ட தீமையியல், விலைமகள் போன்றது. ஏழைமை, வறுமை இருந்தால், ஒழுக்கம் கெட்டேனும் அவற்றைப் போக்கி, நலமும் வளமும் பெற்றுக் கொள்வாள்.

- அதற்காக, நான் குலமகள் ஆயிற்றே; நான் நலமும் வளமும் ஆக்கமும் பெறமுடியவில்லையே’ என்றால், முயற்சி செய்ய வேண்டும். ஆனால், ஒழுக்கம் கெடுத்து நலம் தேடிக்கொள்ளும் விலைமகளைப் போல அன்று. ஒழுக்கம் கெட்டுப் பொருளிட்டுவது வேறு ஒழுக்கம் கெடாமல் பொருளீட்டுவது வேறு: - ஒழுக்கம் கெட்டுத்தான் பொருளிட்ட வேண்டும் என்பது இயற்கை

நெறிமுறையன்று. .

பொருளிட்டுவதற்கு வேறு வேறு அறமுறைகளும் ஏராளமாக உண்டு.

புல்பிடுங்கி விற்றுப் பொருளிட்டுவது முதல், அயல்நாட்டு வாணிகம் செய்து பொருளிட்டுவது வரை நேர்மையான பொருளிட்டும் முறை . முயற்சிகள் பல்லாயிரக் கணக்கில் உண்டு.

தங்கம் வேறு; இரும்பு வேறு. தங்கம் மதிக்கப் பெறும் இடத்தில் மதிக்கப்பெறும் இரும்பு பயன்படும்

இடத்தில் பயன்படும். இதுதான் உலகியல். - வணிகத்தைப் பொறுத்த அளவில், ஓர் அயிர மாத்திரி (கிலோ) தங்கம்,

ஆயிரம் அயிரமாத்திரி இரும்புக்குச் சமமாக இருக்கலாம். ஆனால் வீடு கட்டுவதற்குத் தங்கம் பயன்படாது. இரும்புதான் பயன்படும். தங்கம் இருந்தால் வீடு கட்டமுடியுமா? ஆனால், இரும்பு இருந்தால்தான் வீடு கட்ட முடியும். இவற்றுள் எது உயர்ச்சி? எது

மானம் காக்க உடை வேண்டும்

ஆனால், தங்கத்தை உடையாக அணியமுடியாது.