பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

273


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 273

உண்ண உணவு வேண்டும்; ஆனால், தங்கத்தைக் கொண்டு உடையும் வாங்க முடியும்; உணவும் பெறமுடியும். - எதைஎதை எதுஎதால் செய்துகொள்ள முடியுமோ, அதைஅதை அது.அதால் செய்துகொள்வதுதான் உலகியல்! - அவ்விய நெஞ்சத்தான் அல்வழிகளில் அறமல்லாத தீய வழிகளில் பெரும்பொருள் ஈட்டலாம்; ஆனால், அது நிலைக்காது. அதைத்தான்,

‘சலத்தால் பொருள்செய்து) ஏமார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று! - 660 என்று, பசுமண் கலத்தில் நீரைத் தேக்கி வைத்தது போல் ஒழுகியும், கலத்தையே கரைத்துக் கொண்டும் போய்விடும் என்பார், ஆசிரியர். - இவ்வாறு நிகழ்வது அறவியலாலோ, இறையியலாலோ நிகழ்வதன்று;

உலகியலால், உலக இயங்கியலால் வரும் நிகழ்ச்சியே! - பெரும் பெரும் வல்லாண்மை வாய்ந்த கொள்ளையரும் கொலையரும் பொருளீட்டிச் சேர்த்த குவை, அடுத்து நிகழும் ஆட்சியியல்பால், எவ்வெவ்வாறு பறித்தெடுக்கப் பெறுகின்றன என்பது அன்றாடம் தெரியவரும் நிகழ்வுகளாய் உள்ளனவே! - அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை’ - 659 என்று நூலாசிரியர் வலியுறுத்துவார். இவர் போம் என்பது இறையியலோ,

தீவினைப் பயனோ அல்ல. உலகியல்; அறவியல்; ஆட்சியியல்: - அதுபோலத்தான், w - - - குலமகள் ஏழைமையில் வாழலாம்; ஆனால் அவள் நிலைப்பாள்; நெடுநாள் வாழ்வாள். உடம்பு அழிந்த பின்னும் நினைவால், புகழால் வாழ்வாள்! இஃதே அறவியலும், உலகியலும் ஆம்! - விலைமகள் செல்வத்துள் புரளலாம்; ஆனால் அவள் நிலைக்க வியலாது. பல்வகை நோய்களால் அவள் நலிவாள்; நைவாள்; அதனால் விரைவில் அவள் மடிவாள்; உடம்பும் நிலைக்காது; பெயரும் நிலைக்காது; அவ்வாறு நிலைத்தாலும் புகழொடு அது தோன்றாது; இகழொடுதான் தோன்றியிருக்க முடியும். இதுவும் அறவியல்; உலகியலும் அது! இறையியல் அன்று!