பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 அ-2-13 அழுக்காறாமை 17

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று’ - 236 - என்று ஆசிரியர் அறைவதும் அது! - இதுபோலத்தான், அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்;

நினைத்துப் பார்க்கப் புலப்படும் என்றார். மற்று, கரணிய கருமியத்தால் நிகழும் உலகியலையும், அறிவியலையும், அறவியலையும், இறையியலையும் பிரித்துப் பார்த்து உணரத் தெரியாமல், எல்லாவகையான நிகழ்வுகளுக்கும் மதவியல் அடிப்படையிலேயே, அதுவும் ஆரியவியலான வேதமத இந்தமத அடிப்படையிலேயே பொருள்கொண்டு, அஃது ஒன்றே காரணம் என்று, உலகியலையும் பார்த்தால், முன்பிறவிப் பயன், இம்மை, மறுமை, பாவம், புண்ணியம் - என்னும் மூடக் கருத்துகள்தாம் புலப்படும், என்க. இவை அறிவியலுக்கும் அறவியலுக்கும், இறையியலுக்கும், மெய்யறிவியலுக்கும், உயிரியங்கியலுக்கும் மாறுபட்டன மட்டுமல்ல, வேறுபட்டனவும் தவறானவையும் ஆகும் என்க.

5.

முன்னைய குறளில் அழுக்காறு திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் என்பதற்கு மாறாகவும், சிற்சிலகால் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் பெறுதலும் உண்டு என உலகியல் கூறுதலின், அதற்குப் பின் இது வைக்கப் பெற்றது. - *

கஎ0. அழுக்கற்று அகன்றாரும் இல்லை.அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். - 170. பொருள்கோள் முறை இயல்பு. -

பொழிப்புரை : பொறாமை உணர்வு கொண்டவர் தம் நிலையில் அகற்சி பெற்றுச் சிறப்புற்றதும் இல்லை; அவ்வாறு இல்லாத நல்ல மனம் கொண்டவர் தாம் வளர்ந்த நிலையிலிருந்து சுருங்கி, இல்லாதவராகிப் போனாரும் இல்லை. . - - சில விளக்கக் குறிப்புகள் :

1. இஃது இவ்வதிகாரத்தின் முற்ற முடிந்த கருத்தாகச் சொல்லப் பெற்றது.