பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

275


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 275 2. அழுக்கற்று அகன்றாரும் இல்லை - பொறாமை உணர்வு கொண்டவர்

தம்நிலையில் அகற்சி பெற்றுச் சிறப்புற்றதும் இல்லை. அகன்றார் . தம்நிலையில் அகற்சிப் பெற்றுச் சிறப்புற்றவர். அகற்சி வளர்ந்து பெருகிய நிலையைக் குறித்தது.

3. அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அவ்வாறு பொறாமை இல்லாத நல்ல மனம் கொண்டவர் தாம் வளர்ந்த நிலையிலிருந்து சுருங்கி, இல்லாதவராகிப் போனவரும் இல்லை.

- பெருக்கத்தின் தீர்ந்தார் - தாம் வளர்ந்த நிலையிலிருந்து சுருங்கி

இல்லாதவராகிப் போனவர். - -

பொறாமை மனம் இல்லாத நல்ல குணம் கொண்டவர் தம்மைச் சுற்றியுள்ளவர்களால் பல வகையானும் ஊக்கம் பெறுவதற்குரியவராக மதிக்கப் பெறுவார். ஆகையால் அவர் வளர்ச்சிக்கு அனைவரும் உதவுபவராகவும் ஆக்கந் தருபவராகவுமே இருப்பாராகையால், அவர் படிப்படியே வளர்ச்சி பெறுபவராகவும், அவ் வளர்ச்சியிலிருந்து தாழாதவராகவுமே இருத்தல் உலகியல் உண்மையாகும். பொறாமை கொள்பவரை அவ்வாறு யாரும் பாராட்டிக் கொள்வதில்லை. -

எனவே அவர் வளர்ச்சியுறுதல் இல்லை என்றவாறு.

4. இஃது, இவ்வதிகாரத்தின் முற்ற முடிந்த கருத்தாகக் கூறப்பெற்றதால்,

இறுதியில் வைக்கப் பெற்றது. இ