பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

அ-2-14 வெஃகாமை 18

அறிந்தும் அறியாது)இவ் ஆர்’ - கலி:140:23-24, 26-27 ‘காமம் கலந்த காதல் உண்டெனில் நன்றுமன் - அகம்:268:6 ‘கட்களி செருக்கத்து அன்ன காமம்’ - நற்:35:11 ‘காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ’ - நற்:29:3

காமம் படர்சுட வருந்திய

நோய்மலி வருத்தம்’ - நற்:64:12-13 ‘பரிந்தோர் வந்து நப்புணரப், புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ என்றுநாம் கூறிக் காமம் செப்புதும்’ - நற்:79:5-7 நோய் அலைக் கலங்கிய மதன்அழி பொழுதில் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்’ - நற்:94:1-2 இறந்துசெய் பொருளும் இன்பம் தரும்எனின் இளமையின் சிறந்த வளமையும் இல்லை. இளமை கழிந்த பின்றே வளமை

காமம் தருதலும் இனிறே’ - நற்:126:7-10 ‘காமம் பெரிதே களைளுரோ இலரே - நற்.:335:11 ‘சிறைஅடு கடும்புனல் அன்ன, என்

நிறைஅடு காமம் நீந்து மாறே’ - நற்:369:11

‘யாமமும் நெடிய கழியும் காமமும்

கண்படல் ஈயாது பெருகும்’ - நற்:378:1-2 மாஎன மடலும் ஊர்ப; ஆஎன குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;

மறுகின் ஆர்க்கவும் படுப;

பிறிதும் ஆகுப; காமம்காழ்க் கொளினே! - குறுந்:17 ‘இவள், உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே’ - குறுந்:18:15 ‘காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப் பொழுதுஇடை தெரியின் பொய்யே காமம்’ - குறுந்:32:1-3 நீர்உறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவுஅரிது ஆகிய தண்டாக் காமமொடு

உடன்உயிர் போகுக தில்ல’ - குறுந்:57:2-4