பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 அ-2-14 வெஃகாமை 18

பேராசை அளவுமீறிய ஆசை, பொருளாசை)

‘உற்றபே ராசை கருதி அறன்ஒரூஉம் ஒற்கம் இலாமை இனிது - இனி நா.:39:3

வஞ்சகம் (ஏமாற்று விருப்பம், விருப்ப நடிப்பு இச்சகம் - வ.சொ)

‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்’ - 271 ‘நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்’ - 276 ‘ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா! - 366 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்’ - 824 ‘நஞ்சத்த பிறவாக, நிறையிலள்இவள் என - வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ’ - கலி:69:14-15 ‘வருந்தல் நின் வஞ்சம் உரைத்து - கலி:89:9

ஆய்மலர் புன்னைக்கீழ் அணிநலம் தோற்றாளை நோய்மலி நிலையளாத் துறப்பாயால்; மற்றுநின் வாய்மைக்கண் பெரியதுஓர் வஞ்சமாய்க் கிடவாதோ’ - கலி:135:9-11

‘வஞ்சம் வெறுமின் - நாலடி:172:2

‘வஞ்சமே என்னும் வகைத்தால்’ - திணைமாலை நூ.9:1

‘வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - - திரிகடு:43:4

‘வஞ்ச மலைநாடன் வாரான் கொல்’ - - கைந்நிலை:2:3 ‘வனர்ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா’ - இன்னா:14:1

‘வரிசையின் நிறுத்த வாய்மொழி வஞ்சன் - புறம்:398:8

விருப்பம் (ஈடுபாடு கொள்ளும் உணர்வு

‘விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்’ - 522 ‘கவர்வு விருப்பாகும்’ - - தொல்.:845 வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்’ - தொல்:1053:8 விருந்துஅயர் விருப்பினள் திருந்திழையோளே - நற்:361:9 முயங்கல் விருப்பொடு குறுகினே மாக’ - நற்.:250:6

தாய்காண் விருப்பின் அன்ன - சாஅய் நோக்கினள் - குறுந்:132:5-6